எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கு ஒருங்கிணைப்பு அவசியம்

தஞ்சாவூரில் நவம்பர் 29-ஆம் தேதி நடைபெறவுள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்காக அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

தஞ்சாவூரில் நவம்பர் 29-ஆம் தேதி நடைபெறவுள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்காக அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
இதுதொடர்பாக ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மாலை நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் வேளாண்மைத் துறை அமைச்சர் இரா. துரைக்கண்ணு பேசியது:
தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள மாநகராட்சி மைதானத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நவ. 29-ம் தேதி நடைபெறவுள்ளது. விழாவின்போது மின்சாரம் தடைபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். போக்குவரத்து, பொதுமக்களுக்கு எந்தவித சிரமும் இன்றி வாகனங்கள் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவரை எந்த மாவட்டத்திலும் நடைபெறாத அளவுக்கு தஞ்சாவூரில் மிகச் சிறப்பாக நூற்றாண்டு விழாவை நடத்த அனைத்து துறை அலுவலர்களும் சிறப்பாகப் பணியாற்ற வேண்டும் என்றார் அமைச்சர். மாநிலங்களவை உறுப்பினர் ஆர். வைத்திலிங்கம் பேசியது:
தஞ்சாவூரில் நடத்தப்படும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்த அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றார் அவர்.
 ஆட்சியர் ஆ. அண்ணாதுரை பேசியது: வாகன நிறுத்தும் இடம், போக்குவரத்து வசதிகள், கழிப்பறை வசதிகள், சாலை பராமரிப்புப் பணிகள், பொதுமக்களுக்குக் குடிநீர் வசதிகள் என அனைத்துப் பணிகளும் எந்த வித குறைபாடும் இன்றி செய்ய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநகர் முழுவதும் அழகுபடுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இந்த விழாவைச் சிறப்பாக நடத்த அனைத்து நடவடிக்கைகளும் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார் ஆட்சியர்.
கூட்டத்தில் மக்களவை உறுப்பினர் கு. பரசுராமன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டி. செந்தில்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ந. சக்திவேல், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் பி. மந்திராசலம், மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் துரை. திருஞானம், மாவட்ட பால் கூட்டுறவு சங்கத் தலைவர் ஆர். காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com