கல்லணைக் கால்வாயில் கூடுதலாக தண்ணீர் விட வலியுறுத்தல்

கல்லணைக் கால்வாயில் கூடுதலாக தண்ணீர் விட வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பு) வலியுறுத்தியுள்ளது.

கல்லணைக் கால்வாயில் கூடுதலாக தண்ணீர் விட வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பு) வலியுறுத்தியுள்ளது.
தஞ்சாவூரில் இச்சங்கத்தின் மாவட்டக் குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
மாவட்டத்தில் சரியாக மழை பெய்யாத நிலையில் பாசனத்துக்கு மேட்டூரில் இருந்து உடனடியாக கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும். இன்னும் கடைமடைப் பகுதிகளான பேராவூரணி, சேதுபாவாசத்திரம், மதுக்கூர், பட்டுக்கோட்டை ஆகிய பகுதிகளுக்கு முழுமையாகத் தண்ணீர் செல்லாத நிலை உள்ளது.
எனவே, கல்லணைக் கால்வாயில் நிரந்தரமாக வினாடிக்கு 3,500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்க வேண்டும்.
விவசாய விளைபொருள்களுக்கு கட்டுப்படியான, நியாயமான விலையை தேசிய வேளாண்மைக் குழுப் பரிந்துரைப்படி வழங்கக் கோரியும், கடனில் இருந்து விவசாயிகளை நிரந்தரமாக விடுவிக்க வலியுறுத்தியும் தில்லியில் நவ. 20 முதல் 22-ம் தேதி வரை நடைபெறவுள்ள போராட்டத்தை விளக்கி மாவட்டத்தில் 100 கிராமங்களில் தெருமுனைக் கூட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்டத் தலைவர் என்.வி. கண்ணன் தலைமை வகித்தார். செயலர் சாமி. நடராஜன், மாவட்ட நிர்வாகிகள் எம். பழனியய்யா, பி.எம். காதர் உசேன், என். கணேசன், ஏ. கோவிந்தசாமி, கே. முனியாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com