ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் ரூ. 58 லட்சம் மதிப்பில் வளர்ச்சி திட்டப் பணிகள்

தஞ்சாவூர் ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் ரூ. 58 லட்சம் மதிப்பில் வளர்ச்சி திட்டப் பணிகள் மேற்கொள்வது தொடர்பாக ஆட்சியர் ஆ. அண்ணாதுரை வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.

தஞ்சாவூர் ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் ரூ. 58 லட்சம் மதிப்பில் வளர்ச்சி திட்டப் பணிகள் மேற்கொள்வது தொடர்பாக ஆட்சியர் ஆ. அண்ணாதுரை வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.
இந்த மருத்துவமனையில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்வதற்கு ரூ. 45 லட்சம் மதிப்பிலும், சாலைகளை மேம்படுத்துவதற்கு ரூ. 10 லட்சம் மதிப்பிலும் திட்ட அறிக்கைத் தயாரிக்க வேண்டும் என பொதுப் பணித் துறை மருத்துவப் பணிகள் கட்டடப் பிரிவு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், மருத்துவமனையில் உள்ள பிரசவ பிரிவில் கழிப்பறைகள், மின் விளக்கு வசதி போன்றவற்றை உடனடியாகச் சரி செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
பின்னர், சீர்மிகு நகர மேம்பாட்டுத் திட்டத்தில் ராஜப்பா பூங்கா ரூ. 1 கோடியே 7 லட்சம் மதிப்பில் மேம்படுத்தப்படவுள்ளதையும் ஆட்சியர் ஆய்வு செய்தார்.
அப்போது, மாநகராட்சி ஆணையர் மு. வரதராஜ், மருத்துவக்கல்லூரி முதல்வர் ஜெயக்குமார், பொதுப் பணித் துறை மருத்துவப் பணிகள் கட்டடச் செயற் பொறியாளர் ராஜ்மோகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com