டெங்கு விழிப்புணர்வு நாள் பேரணி

பேராவூரணியில் டெங்கு விழிப்புணர்வு நாள் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

பேராவூரணியில் டெங்கு விழிப்புணர்வு நாள் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
வாரம்தோறும் வியாழக்கிழமை டெங்கு விழிப்புணர்வு தினம் கடைப்பிடிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி, பேராவூரணி காந்தி பூங்கா அருகே நடைபெற்ற விழிப்புணர்வு பேரணிக்கு வட்டார மருத்துவ அலுவலர் வி. செளந்தர்ராஜன் தலைமை வகித்தார். பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் கோவிந்தராசு பேரணியை தொடங்கி வைத்தார்.
பேரணி முக்கிய வீதிகள் வழியாக டெங்கு விழிப்புணர்வு முழக்கங்களை எழுப்பியபடி சென்று புதிய பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது. பேரணியில், வட்டாட்சியர் பாஸ்கர், ஒன்றிய ஆணையர்கள் குமாரவடிவேல், சித்ரா, பேரூராட்சி செயல் அலுவலர் அ. கணேசன், மருத்துவர்கள் ஜஸ்டின்பிரசாத், ரஞ்சித், தீபா, காவல் ஆய்வாளர் ஜனார்த்தனன், சுகாதார மேற்பார்வையாளர் சந்திரசேகர் உட்பட 500-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் பங்கேற்றனர். டெங்கு விழிப்புணர்வு தினத்தையொட்டி மருத்துவ முகாம், கொசுப்புழு உற்பத்தி குறித்த கண்காட்சி மற்றும் நிலவேம்பு  கசாயம் வழங்குதல் நடைபெற்றது. இதில் திரளான பொதுமக்கள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com