பட்டுக்கோட்டையில் தரமான விதை உற்பத்தி முறைகள் குறித்த பயிற்சி முகாம்

பட்டுக்கோட்டையில் வேளாண்மைத் துறையின் கீழ் செயல்படும் அட்மா விரிவாக்க சீரமைப்பு திட்டத்தில் விதைப்பண்ணை விவசாயிகளுக்கான

பட்டுக்கோட்டையில் வேளாண்மைத் துறையின் கீழ் செயல்படும் அட்மா விரிவாக்க சீரமைப்பு திட்டத்தில் விதைப்பண்ணை விவசாயிகளுக்கான தரமான விதை உற்பத்தி முறைகள் குறித்த பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பட்டுக்கோட்டை வேளாண் மை உதவி இயக்குநர் எஸ்.ஈஸ்வர் தலைமை வகித்தார். இதில், வேளாண்மை ஆராய்ச்சி நிலைய உதவிப் பேராசிரியர் பாரதி பேசுகையில், விதை ரகம் தேர்வு செய்தல்,  விதை அளவு, விதை நேர்த்தி செய்தல், நடவு வயல் தயார் செய்தல், பயிர் இடைவெளி பராமரித்தல், களை நிர்வாகம், ஒருங்கிணைந்த உர நிர்வாகம், ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் ஆகியன குறித்து படவிளக்க காட்சி மூலம் விளக்கினார்.
விதைச் சான்று அலுவலர் சாந்தி பேசுகையில்,  தரமான விதை பற்றியும்,  இனத்தூய்மையை பராமரிக்க பயிர் விலகு தூரம் பராமரிப்பதன் அவசியம், அறுவடை, சேமிப்பு, சுத்திகரிப்புப் பணி ஆகியன பற்றி எடுத்துக் கூறினார்.       
வேளாண்மை அலுவலர் எஸ்.மாலதி பேசுகையில்,  நெல்  ரகம் மாதிரிகளை காண்பித்து, நெல் ரகங்களின் குணாதிசயங்கள் பற்றி விளக்கினார். பின்னர்,  நெல் வயலில் நேரடி செயல் விளக்கமாக கலவன்கள் கண்டறிதல், விதை சுத்திகரிப்பு நிலையத்தில் விதை சுத்திகரிப்பது ஆகியவை பற்றி விளக்கப்பட்டது. வட்டார தொழில் நுட்ப மேலாளர் சி.சுகிதா நன்றி கூறினார். முகாம் ஏற்பாடுகளை உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் த.ரவி, வி.ரமேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com