போக்குவரத்து தொழிலாளர் வேலைநிறுத்தத்துக்கு ஆதரவு: ஓய்வூதியர் கூட்டத்தில் முடிவு

போக்குவரத்துத் தொழிலாளர் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவு அளிப்பது என ஓய்வூதியர் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

போக்குவரத்துத் தொழிலாளர் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவு அளிப்பது என ஓய்வூதியர் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
தஞ்சாவூரில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் கும்பகோணம், நாகை மண்டலங்களில் செயல்பட்டு வரும் போக்குவரத்து ஒய்வூதியர் கூட்டமைப்பின் நிர்வாகக் குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
போக்குவரத்துத் தொழிலாளர்களின் 13-ஆவது ஊதிய ஒப்பந்தம் ஓராண்டை கடந்த பிறகும், ஏறத்தாழ பல கட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகும் அரசு முடிவுக்குக் கொண்டு வராமல் தொழிலாளர்களின் பொறுமையை மிகவும் சோதிக்கிறது.
குறைந்தபட்ச ஊதியம் ரூ. 21,000 என நிர்ணயம் செய்வது, ஓய்வூதியர்களின் ஓய்வூதியத்தை அரசே பொறுப்பேற்பது, 2003, ஏப். 1-ஆம் தேதிக்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கும், பழைய ஓய்வூதியத் திட்ட அடிப்படையில் நடைமுறைப்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளில் தமிழக அரசும், கழக நிர்வாகங்களும் சுமூகமான முடிவை எட்டத் தொழிற் சங்கக் கூட்டமைப்பின் சார்பில் வலியுறுத்தப்பட்டு, கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில் செப். 24 ஆம் தேதியிலிருந்து வேலைநிறுத்தம் அறிவித்து நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
ஓய்வூதியர்களுக்கும், கடந்த மே மாதம் நடைபெற்ற வேலைநிறுத்ததின் போது அன்று அமைச்சர்கள் முன்னிலையில் தொழிற்சங்கக் கூட்டமைப்பினருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை முடிவில் ஓய்வூதியர்களின் நிலுவையிலுள்ள அனைத்து பணப்பலன்களையும் செப்டம்பர் மாதத்துக்குள் வழங்கப்படும் என்ற பேச்சுவார்த்தை உறுதிமொழியும் மீறப்பட்டுள்ளது. தற்போது நீதிமன்றத்தில் அக்டோபர் முதல் வாரத்திற்குள் ஓய்வூதியர்களின் பணப்பலன்கள் வழங்கப்படும் என்ற அரசு உத்திரவாதம் கண்டனத்திற்குரியது.
எனவே போக்குவரத்துத் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி செப். 24-ஆம் தேதி நடைபெறும் வேலைநிறுத்தத்துக்கு ஓய்வூதியர் கூட்டமைப்பு முழுமையான ஆதரவு அளிப்பதுடன் போரட்டத்திலும் பங்கேற்பது என்றும், இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை விளக்கி செப். 22-ஆம் தேதி தஞ்சாவூரில் விளக்க வாயில் கூட்டம் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.
கூட்டமைப்பின் பொதுச் செயலர் பி. அப்பாதுரை தலைமை வகித்தார். கூட்டத்தில் கெளரவ தலைவர் மல்லி தியாகராஜன், தலைவர் ஏ. சுப்பிரமணியன், அலுவலர்கள் நல சங்கப் பிரதிநிதிகள், சந்திரமோகன், முருகையன், கண்காணிப்பாளர் சங்கப் பிரதிநிதிகள் பாலசுப்பிரமணியன், சம்பத், நிர்வாகிகள் வெங்கடேச பிரசாத், பி. அழகிரி, கே. வீரையன், ஏஐடியூசி துரை. மதிவாணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com