கும்பகோணம் ஜெயமாருதி விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு  பட்டாபிராமர் அலங்காரம்

உலக நன்மை வேண்டி ஜெயமாருதி விஸ்வரூப ஆஞ்சநேயர் பட்டாபிராமர் அலங்காரத்தில் காட்சியளித்தார். 

உலக நன்மை வேண்டி ஜெயமாருதி விஸ்வரூப ஆஞ்சநேயர் பட்டாபிராமர் அலங்காரத்தில் காட்சியளித்தார். இதையொட்டி ஆஞ்சநேயருக்கு துளசியால் 1008 ராம நாம அர்ச்சனையும் செய்யப்பட்டது.
கும்பகோணம் பாலக்கரை காமராஜ் நகர் அருகில் ஜெயமாருதி விஸ்வரூப ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. 
இக்கோயிலில் இயற்கை பொய்ப்பித்ததால் ஏற்பட்ட வறட்சி நீங்கி நீர்வளம் வேண்டியும், உலக மக்கள் நலமுடன் வாழ வேண்டியும்,  அமாவாசையை முன்னிட்டு ஜெயமாருதி விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு பட்டாபிராமர் அலங்காரம் செய்யப்பட்டது.
இந்த சிறப்பு வழிபாட்டில்  1008 ராம நாம ஜபம், அகண்டபாராயணம், சகஸ்ர நாம அர்ச்சனை, திரிசத அர்ச்சனைகளும் செய்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. அப்போது திரளான பக்தர்கள் கூட்டுப் பிரார்த்தனை செய்து ஆஞ்சநேயரை வழிபட்டனர். மேலும், பல பக்தர்கள் நேர்த்திக்கடனாக மட்டை தேங்காய்களை ஆஞ்சநேயர் காலடியில் வைத்து வழிபட்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com