டெல்டா மாவட்டங்களில் தொடர் போராட்டம்:  கும்பகோணம் வந்த அதிவிரைவுப் படையினர்

டெல்டா மாவட்டங்களில் காவிரிக்காக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருவதன் எதிரொலியாக அதிவிரைவுப் படையினர் கும்பகோணத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வருகை தந்தனர்.

டெல்டா மாவட்டங்களில் காவிரிக்காக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருவதன் எதிரொலியாக அதிவிரைவுப் படையினர் கும்பகோணத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வருகை தந்தனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, டெல்டா மாவட்டங்களில் சாலை, ரயில் மறியல், மத்திய அரசு அலுவலங்கள் முற்றுகை என பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. 
இதுதவிர, கதிராமங்கலம், திருவாரூர், நன்னிலம் ஆகிய இடங்களில் ஓஎன்ஜிசி விவகாரம், நெடுவாசலில் ஹைட்டோர கார்பன் திட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு அறிவிப்பால் டெல்டா பகுதியில் விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 
 இப்படி டெல்டா மாவட்டத்தில் போராட்டங்கள் நடைபெறாத நாள்களே இல்லை நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில், மத்திய பாதுகாப்பு படையின் ஒரு பிரிவான அதிவிரைவு படையினர் தஞ்சாவூர் மாவட்டத்துக்கு சனிக்கிழமை வந்தனர். 
தஞ்சாவூரில் தங்கியுள்ள இவர்கள் ஞாயிற்றுக்கிழமை திருவிடைமருதூர், கும்பகோணம், பாபநாசம் ஆகிய பகுதிகளுக்குச் சென்று, அந்தந்த உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர்களை சந்தித்து, தங்களது பகுதியில் நிலவும் பிரச்னைகள் குறித்து கேட்டறிந்து விட்டு, மீண்டும் தஞ்சாவூருக்கு சென்றனர். தஞ்சாவூரில் ஒரு வார காலத்துக்கு தங்கியிருக்கும் இந்த அதிவிரைவு படையினர் மாவட்டம் முழுவதும் செல்ல உள்ளனர்.
இதுகுறித்து கும்பகோணம் காவல் துணைக் கண்காணிப்பாளர் எஸ். கணேசமூர்த்தி கூறியது: 
மத்திய பாதுகாப்பு படையின்  கோவையில் உள்ள 105வது பிரிவின் அதிவிரைவு படையின் உதவி கமாண்டர் வி.எப்.கிளாரன்ஸ் தலைமையில் வந்துள்ள 40 வீரர்கள், கலவரம் ஏற்படக்கூடிய பகுதிகள் உள்ளனவா எனக் கேட்டறிந்தனர் என்றார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com