6 மாவட்டங்களில் கூட்டுறவு பணியாளர்கள் ஆகஸ்ட் 20-ல் பேரணி

தமிழ்நாடு மாநில தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி 6 மாவட்டங்களில் ஆக. 20-ம் தேதி


தமிழ்நாடு மாநில தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி 6 மாவட்டங்களில் ஆக. 20-ம் தேதி பேரணி நடத்துவது தொடர்பான ஆயத்தக் கூட்டம் தஞ்சாவூரில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
மண்டல அளவில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு மாவட்டச் செயலர் எம். மணிவண்ணன் தலைமை வகித்தார்.
தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களில் பணிபுரியும் விற்பனையாளர்களுக்கு ஊதிய உயர்வு அனுமதிக்கப்பட்டு, 3 ஆண்டுகள் நிறைவடையும் நிலையைக் கருத்தில் கொண்டு, கடுமையான விலைவாசி உயர்வையும், பணியாளர்கள் பெற்று வரும் மிகக் குறைவான ஊதியத்தை மனதில் கொண்டும், இப்பணியாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில் நியாயமான புதிய ஊதியம் அனுமதிக்கப்பட வேண்டும். நியாய விலைக் கடைகளில் ஏற்படும் காலிப் பணியிடங்கள் உடனுக்குடன் நிரப்பப்பட வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் கூடுதல் பொறுப்பில் பணி பார்க்கும் பணியாளர்களுக்கு இரட்டிப்பு ஊதியம் வழங்கப்பட வேண்டும்.
சங்கங்களுக்கு நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் வழங்கப்படும் பொருட்கள் தரமானதாகவும், சரியான எடை அளவிலும் நியாய விலைக் கடைகளுக்கு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூர், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர்
ஆகிய மாவட்டங்களில் ஆக. 20-ம் தேதி பேரணி நடத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com