மாணவர் விகிதத்தை குறைக்க வலியுறுத்தல்

அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் மாணவர் விகிதம் 1:30 என உருவாக்க பி.எட் பட்டதாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் மாணவர் விகிதம் 1:30 என உருவாக்க பி.எட் பட்டதாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சருக்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் பாலசுப்பிரமணியன் அனுப்பியுள்ள கோரிக்கை மனு: தற்போது ஆசிரியர் மாணவர் விகிதம் 1:40 என உள்ளது. தொடக்க, நடுநிலைப்பள்ளியில் மட்டும் ஆசிரியர் மாணவர் விகிதம் 1:30 என  உள்ளது. 
அதேபோஸ, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியர் மாணவர் விகிதத்தை 1:30 என மாற்றினால் மாணவர்கள் பயன் பெறுவர். 
 இதன்மூலம் கூடுதலாக ஏற்படும் காலிப் பணியிடங்களில் ஆசிரியர் பணிக்கு காத்திருக்கும் இளைஞர்களுக்கு பணிக்கான வாய்ப்பு ஏற்படும் என அதில் வலியுறுத்தியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com