பாசன வாய்க்காலில் தண்ணீர் விட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

கும்பகோணம் அருகே பாசன வாய்க்காலில் தண்ணீர் விட வலியுறுத்தி பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கும்பகோணம் அருகே பாசன வாய்க்காலில் தண்ணீர் விட வலியுறுத்தி பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கும்பகோணம் அருகே திருவைக்காவூர் கொள்ளிடம் ஆற்றிலிருந்து நீலத்தநல்லூர் வாய்க்கால் பிரிந்து செல்கிறது. இந்த வாய்க்கால் மூலம் திருவைக்காவூர், குடிதாங்கி, மேலாத்துக்குறிச்சி, நீலத்தநல்லூர், காவற்கூடம் உள்ளிட்ட பத்துக்கும் அதிகமான கிராமங்களில் சுமார் ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.
கொள்ளிடம் ஆற்றில் கரைபுரண்டு தண்ணீர் ஓடும் நிலையில் நீலத்தநல்லூர் வாய்க்காலில் பாசனத்துக்காகத் தண்ணீர் திறக்கப்படவில்லை. 
எனவே, குடிதாங்கி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் வாய்க்காலில் இறங்கி நின்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். 
இதில், தற்போது கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் அதிகளவு செல்வதால் எங்களுக்கு எந்தப் பயனும் இல்லை என்றும், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதால், மின் மோட்டார் மூலம் பாசனம் செய்யப்படுவதால் கூடுதல் செலவு ஏற்படுவதாகவும், எனவே உடனடியாகப் பாசனத்துக்குத் தண்ணீரை திறக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com