தஞ்சாவூர் - திருச்சி இரட்டை ரயில் பாதையில் என்ஜின் மூலம் பரிசோதனை

தஞ்சாவூர் - திருச்சி இடையே இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் தஞ்சாவூரில் இருந்து சோளகம்பட்டி வரை அலுவலர்கள் குழுவினர் என்ஜின் மூலம் வெள்ளிக்கிழமை

தஞ்சாவூர் - திருச்சி இடையே இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் தஞ்சாவூரில் இருந்து சோளகம்பட்டி வரை அலுவலர்கள் குழுவினர் என்ஜின் மூலம் வெள்ளிக்கிழமை பரிசோதனை மேற்கொண்டனர்.
தஞ்சாவூர் - பொன்மலை (திருச்சி அருகில்) இடையேயுள்ள 49 கி.மீ. தொலைவுக்கு ரயில் பாதையை இரு வழிப் பாதையாக அமைக்க ரூ. 400 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டது. இதைத்தொடர்ந்து, இத்திட்டத்துக்கு மத்திய அரசு 2011 - 12 ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் ரூ. 190 கோடி ஒதுக்கீடு செய்தது.
இதையடுத்து, தஞ்சாவூரிலிருந்து திருச்சி செல்லும் வழித்தடத்தில் இடதுபுறமாக, ஏற்கெனவே மீட்டர் கேஜ் ரயில் பாதை இருந்த தடத்தில், இரண்டாவது அகல ரயில் பாதை அமைக்கப்படுகிறது.
இதில், முதல் கட்டமாக பொன்மலை - சோளகம்பட்டி இடையேயான 18 கி.மீ. தொலைவுக்கு இரண்டாவது இருப்புப் பாதை அமைக்கும் பணி 2017 ஜூலை மாதம் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இரண்டாம் கட்டமாக சோளகம்பட்டி - தஞ்சாவூர் இடையே 29 கி.மீ. தொலைவுக்கு இரண்டாவது இருப்புப் பாதை அமைக்கும் பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், இந்த இருப்புப் பாதையில் என்ஜின் மூலம் வெள்ளிக்கிழமை பரிசோதனை செய்யப்பட்டது.
ரயில் விகாஸ் நிகம் நிறுவனத்தின் (ஆர்.வி.என்.எல்.) பொது மேலாளர் வி.ஆர். நாயுடு, உதவிப் பொது மேலாளர் சி.வி. சங்கர், இருப்புப் பாதை பொறியாளர்கள் இச்சோதனையில் ஈடுபட்டனர். இதில், சோளகம்பட்டியில் இருந்து தஞ்சாவூர் வரை 60 கி.மீ. வேகத்திலும், தஞ்சாவூரில் இருந்து சோளகம்பட்டி வரை 110 - 120 கி.மீ. வேகத்திலும் என்ஜின் இயக்கப்பட்டது.
இதில், குறைகள் சரி செய்யப்பட்டு, ரயில் பாதுகாப்பு ஆணையருக்குப் பரிந்துரை செய்யப்படும் என்றும், அதைத்தொடர்ந்து ஆணையரின் சோதனை நடைபெறும் எனவும் ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com