போக்குவரத்து ஓய்வூதியத்தை அரசே பொறுப்பேற்க வலியுறுத்தல்

போக்குவரத்து ஓய்வூதியத்தை அரசே பொறுப்பேற்று வழங்க வேண்டும்  என ஏஐடியுசி போக்குவரத்து ஓய்வூதியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

போக்குவரத்து ஓய்வூதியத்தை அரசே பொறுப்பேற்று வழங்க வேண்டும்  என ஏஐடியுசி போக்குவரத்து ஓய்வூதியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தஞ்சாவூரில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக கும்பகோணம் - நாகப்பட்டினம் மண்டலங்களில் செயல்படும் ஏஐடியூசி ஓய்வூதியர் சங்கத்தின் நிர்வாகக் குழுக் கூட்டம் அன்மையில் நடைபெற்றது. அரசுப் போக்குவரத்து ஓய்வூதியத்தை ஓய்வூதியச் சீரமைப்புக் குழுவின் பரிந்துரைப்படி அரசே பொறுப்பேற்று வழங்க வேண்டும்.  போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு நிர்ணயிக்கப்படும் 13-வது ஊதிய உயர்வு ஓய்வூதியர்களுக்கும் வழங்க வேண்டும். 
முன்னதாக ஓய்வூதியத்துடன் 119 சதவீத அகவிலைப்படி மட்டும் இணைத்து ஓய்வூதியம் வழங்கப்படுவதை ஒப்பந்தக் காலம் முடிவு பெற்ற அகவிலைப்படி 125 சதவீத உயர்வுடன் இணைக்க வேண்டும். 
அதற்கு பிறகு உயர்த்தப்பட்ட அகவிலைப்படி உயர்வு 139 சதத்துக்கும் சேர்த்து அகவிலைப்படி நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். சேம நல ஓய்வூதியம் 12-வது ஊதிய ஒப்பந்தத்தில் தொழிலாளர்களிடம் மாத ஊதியத்தில் ரூ. 150 பிடித்தம் செய்து வழங்கப்பட்டு வந்தது. 
இது, 2016 ஏப்ரலுடன் நிறுத்தப்பட்டது. தற்போதைய பேச்சுவார்த்தையில் சேம நல ஓய்வூதியம் கைவிடப்படுவதாக அரசு அறிவித்துள்ளது கண்டனத்துக்குரியது. தொழிலாளர்கள் பங்களிப்புடன் கூடிய இந்த சேம நல நிதி தொடர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், 2016, நவம்பரில் வாரிசு பணிக்காகத் தேர்வு செய்யப்பட்ட தொழிலாளர்களின் வாரிசுகளுக்குப் பணி நியமன ஆணையை கும்பகோணம் நிர்வாகம் வழங்க வேண்டும் எனத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சங்கத் தலைவர் ஜெ. சந்திரமோகன் தலைமை வகித்தார். பொதுச் செயலர் பி. அப்பாத்துரை, கெளரவத் தலைவர் மல்லி. தியாகராஜன், பொருளாளர் எஸ். பாலசுப்பிரமணியன், ஏஐடியுசி மாநிலச் செயலர் சி. சந்திரகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com