கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே உயர்நிலைப் பாலம் அமையவுள்ள இடத்தில் வேளாண் அமைச்சர் ஆய்வு

பாபநாசம் வட்டம்,  கோவிந்தநாட்டுச்சேரி ஊராட்சியில் தஞ்சாவூர் மாவட்டத்தையும் அரியலூர் மாவட்டத்தையும் இணைக்கும்

பாபநாசம் வட்டம்,  கோவிந்தநாட்டுச்சேரி ஊராட்சியில் தஞ்சாவூர் மாவட்டத்தையும் அரியலூர் மாவட்டத்தையும் இணைக்கும் வகையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ரூ. 56 கோடி மதிப்பீட்டில் உயர்நிலை பாலம் கட்டப்பட உள்ள இடத்தை அமைச்சர் இரா.துரைக்கண்ணு செவ்வாய்க்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும், கும்பகோணம் திருவையாறு பிரதான சாலையில் சருக்கை ஊராட்சி பிரதான சாலையில் திருமண மண்டபம் கட்டுவதற்கான இடத்தையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முன்னதாக,  ராஜகிரி ஊராட்சி எம்ஜிஆர் நகரில் குடமுருட்டி  ஆற்றின் தடுப்பணை கரைபகுதி உடைந்துள்ளதை பார்வையிட்டு உடனடியாக கரையை  பலப்படுத்தி தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என பொதுப்பணித்துறை  அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
ஆய்வின்போது,  ஆட்சியர்ஆ.அண்ணாதுரை, ஊராட்சிகள் உதவி இயக்குநர் முருகேசன், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சரவணசெல்வம், உதவி கோட்ட பொறியாளர் இந்திராகாந்தி, முன்னாள் எம்.எல்.ஏ. எம்.ராம்குமார் மாவட்ட கூட்டுறவு சங்க ஒன்றிய தலைவர் எஸ்.மோகன்,,முன்னாள் ஒன்றிய குழு தலைவர்கள் கே.கோபிநாதன்,ஏ.வி.கே.அசோக்குமார்,வட்டாட்சியர் மாணிக்கவேல், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com