திருவையாறில் இன்று தமிழிசை விழா தொடக்கம்

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் தமிழிசை மன்றம் சார்பில் 47-ஆம் ஆண்டு தமிழிசை விழா ஞாயிற்றுக்கிழமை (ஜன.14) தொடங்குகிறது.

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் தமிழிசை மன்றம் சார்பில் 47-ஆம் ஆண்டு தமிழிசை விழா ஞாயிற்றுக்கிழமை (ஜன.14) தொடங்குகிறது.
திருவையாறு அரசர் கல்லூரித் திடலில் உள்ள புதிய கலையரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் தொடங்கப்படும் இவ்விழா, தொடர்ந்து 3 நாள்களுக்கு நடைபெறுகிறது. விழாவை வேளாண்மைத் துறை அமைச்சர் இரா. துரைக்கண்ணு தொடங்கி வைக்கிறார்.
கல்யாணபுரம் கணேசன் குழுவினரின் பெருவங்கிய இசை நிகழ்ச்சியுடன் தொடங்கும் இவ்விழாவில் திருமுறை இசை, நாட்டியம், சீர்காழி கோ. சிவசிதம்பரத்தின் தமிழிசை அரங்கம், இன்னிசை பட்டிமன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. தொடர்ந்து, இரண்டாம் நாளாக திங்கள்கிழமை மாலை பாட்டு, வீணை, ருக்மணி விஜயகுமாரின் பரதநாட்டியம், பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் தலைமையில் பட்டி மன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. மேலும், விருதுகள் வழங்கும் விழாவும் நடைபெறவுள்ளது. மூன்றாம் நாளான செவ்வாய்க்கிழமை மாலை திருமுறை இசை, பாட்டு, பரதநாட்டியம், இரு வயலின் இசை, வலங்கை சா. முத்துக்குமார் குழுவினரின் கிராமிய நடன, பக்தி கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
நிறைவு விழாவில் சற்குரு தியாக பிரம்ம சபா தலைவரும், தமிழிசை மன்றக் காப்பாளருமான ஜி.ஆர். மூப்பனார் விருதுகள் வழங்கி, பாராட்டி பேசிகின்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com