நெல் குவிண்டாலுக்கு ரூ.2 ஆயிரம் விலை நிர்ணயம் செய்யக்கோரி முதல்வருக்கு மனு

நெல் கொள்முதல் நிலையங்களில் ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ. 2 ஆயிரம் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என தஞ்சை தெற்கு மாவட்ட பாஜக வழக்குரைஞர் பிரிவு தலைவர் ப.பாலசுப்பிரமணியன் தமிழக

நெல் கொள்முதல் நிலையங்களில் ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ. 2 ஆயிரம் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என தஞ்சை தெற்கு மாவட்ட பாஜக வழக்குரைஞர் பிரிவு தலைவர் ப.பாலசுப்பிரமணியன் தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
தஞ்சை காவிரி டெல்டா பாசன பகுதிகளில் நெல் பயிரிடப்பட்டு தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளது. சம்பா தாளடி பருவத்துக்கான நெல் கொள்முதல் விலையை தமிழக அரசு அறிவித்துள்ளது. கிரேடு ஏ ரக நெல்லுக்கு குவிண்டால் ரூ.1660, பொது சாதாரண ரக நெல்லுக்கு குவிண்டால் ரூ.1600 ஆக விலை நிர்ணயம் செய்வது அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் உற்பத்தி செலவு அதிகமாக உள்ளதாலும் பருவமழை பொய்த்து போனதாலும் காவிரி பாசன கடைமடை பகுதிக்கு மேட்டூர் அணையிலிருந்து முறையாக தண்ணீர் வழங்கப்படாததாலும், வறட்சியால் பயிர்கள் சேதமடைந்ததால் குறைவான அளவே சம்பா பயிர் அறுவடை செய்யும் நிலை இருப்பதால் குண்டால் நெல்லுக்கு ரூ.2 ஆயிரம் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com