அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

அரசுத் துறையில் காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி தஞ்சாவூர் ஆட்சியரகம் முன் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அரசுத் துறையில் காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி தஞ்சாவூர் ஆட்சியரகம் முன் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பணியாளர் சீரமைப்பு என்ற பெயரில் அரசுத் துறையை ஒப்பந்தமயமாக்கும் அரசாணை 56-ஐ ரத்து செய்ய வேண்டும். தொகுப்பூதியம், மதிப்பூதியம், அயலாக்க முறை, ஒப்பந்த முறை ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும்.  என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. வட்டத் தலைவர் சங்கர் கணேஷ் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் ரெங்கசாமி, வருவாய்த் துறை அலுவலர் சங்க மாவட்டத் தலைவர் பார்த்தசாரதி, ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்க மாவட்டப் பொருளாளர் ராகவன், வனத் துறை அலுவலர் சங்கம் தமிழ்மாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com