தீவிபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிவாரண உதவி

பாபநாசம் அருகே கீழகோவில்பத்து கிராமம் அம்பலகார தெருவை சேர்ந்த  விவசாய கூலித் தொழிலாளி செல்வம் மனைவி லெட்சுமி (55).

பாபநாசம் அருகே கீழகோவில்பத்து கிராமம் அம்பலகார தெருவை சேர்ந்த  விவசாய கூலித் தொழிலாளி செல்வம் மனைவி லெட்சுமி (55).  கடந்த திங்கள்கிழமை இரவு லெட்சுமி குடிசை வீட்டில் எதிர்பாராதவிதமாக தீப்பற்றியது. அக்கம்பக்கத்தினர் தீயை அணைத்தனர். 
ஆனால், தீவிபத்தில் வீட்டின் மேற்கூரை முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. 
மேலும்,  வீட்டிலிருந்த உடைகள், வீட்டு உபயோக பொருள்கள்,  பள்ளி, கல்லூரி சான்றிதழ்கள் உள்ளிட்ட ரூ. 20  ஆயிரம் மதிப்பிலான பொருள்கள் தீயில் எரிந்து சேதமானதாக கூறப்படுகிறது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற அம்மாபேட்டை  முன்னாள் ஒன்றிய குழுத் தலைவர் ஏ.வி.சூரியநாராயணன்,  முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் ஓ.ஏ. ராமச்சந்திரன், பாபநாசம் வட்டாட்சியர் மாணிக்கராஜ், மண்டல துணை வட்டாட்சியர் தர்மராஜ், வருவாய் அதிகாரி ஆர்.சத்தியராஜ், கிராம நிர்வாக அதிகாரி சுபாஷினி உள்ளிட்டோர் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி அரசு நிவாரணமாக ரூ. 5 ஆயிரம், வேட்டி, புடவை, அரிசி, மண்ணெண்ணெய் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com