கபிஸ்தலம் காவல் ஆய்வாளரை கண்டித்து சாலை மறியல்: 30 பேர் கைது

சிறுமியை துன்புறுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல் ஆய்வாளரைக் கண்டித்து கும்பகோணத்தில் வியாழக்கிழமை சாலை

சிறுமியை துன்புறுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல் ஆய்வாளரைக் கண்டித்து கும்பகோணத்தில் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற 30 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கபிஸ்தலம், அதியம்பநல்லுôரைச் சேர்ந்த தொழிலாளியின் 17 வயது மகள் புதன்கிழமை இரவு வீட்டிற்கு செல்வதற்காக, கபிஸ்தலம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி நடந்து சென்றார். அப்போது அவரை அப்பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்கள் மதுபோதையில் தாக்கியுள்ளனர்.
இதில் காயமடைந்த சிறுமி கூச்சலிடவே, தாக்குதலில் ஈடுபட்ட இளைஞர்கள் தப்பியோடிவிட்டனர். இதையடுத்து சிறுமியை அப்பகுதியினர் மீட்டு, சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து கபிஸ்தலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், காவல் ஆய்வாளர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியினரும், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் கும்பகோணம் அரசு மருத்துவமனை வாயிலில் புதன்கிழமை நள்ளிரவு அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவலறிந்து அங்கு வந்த போலீஸார், மறியலில் ஈடுபட்டவர்களுடன் நடத்திய சமாதான பேச்சுவார்த்தையின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.
3 பிரிவுகளில் வழக்கு...: இந்நிலையில் அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்டதாக விஏஒ சுரேந்தர் கொடுத்த புகாரின் பேரில், மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் விவேகானந்தன் தலைமையிலான 30 பேர் மீது கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய போலீஸார், அனுமதியின்றி சட்ட விரோதமாக ஒன்று கூடுதல், தீய செயல்களுக்கு திட்டமிடுதல், பொதுமக்களுக்கு இடையூறாக மறியல் செய்தல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com