தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தைக் கண்டித்துகாங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு சம்பவத்தைக் கண்டித்து தஞ்சாவூரில் காங்கிரஸ் கட்சியினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு சம்பவத்தைக் கண்டித்து தஞ்சாவூரில் காங்கிரஸ் கட்சியினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தஞ்சாவூர் ரயிலடியில் மாநகர மாவட்ட காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் பி.ஜி. ராஜேந்திரன் தலைமை வகித்தார். இதில், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்தும், பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்த்தப்பட்டதைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
பொருளாளர் ஆர். பழனியப்பன், முன்னாள் மாவட்டத் தலைவர் நாஞ்சி கி. வரதராசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதேபோல, தலைமை அஞ்சலகம் முன் தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்குத் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் து. கிருஷ்ணசாமி வாண்டையார் தலைமை வகித்தார். துணைத் தலைவர் கோ. அன்பரசன், மாநிலப் பொதுக் குழு உறுப்பினர்கள் கண்டிதம்பட்டு கோவிந்தராஜ், ஏ.ஆர். யோகானந்தம், ராமசாமி, ஐஎன்டியுசி பொதுச் செயலர் மோகன்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கும்பகோணம் அருகே மூன்று பேருந்துகளின் கண்ணாடி உடைப்பு
தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து கும்பகோணம் அருகே மூன்று அரசுப் பேருந்துகளின் கண்ணாடிகளை மர்ம நபர்கள் உடைத்தனர்.
அரசு விரைவு பேருந்து ஒன்று தஞ்சாவூரிலிருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்து சுந்தரபெருமாள்கோயில் அருகில் வந்து கொண்டிருந்த போது, எதிரில் இருசக்கர வாகனத்தில் முகத்தை கைக்குட்டையால் மூடியபடி வந்த வந்த இரண்டு நபர்கள், காலியான பீர் பாட்டிலால் பேருந்தின் கண்ணாடியை உடைத்துவிட்டு தப்பியோடிவிட்டனர். இதுகுறித்து பேருந்து ஓட்டுநர் உதயகுமார், சுவாமிமலை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதேபோல, தஞ்சாவூரிலிருந்து சென்னைக்கு புதன்கிழமை இரவு சென்ற அரசு பேருந்து பாபநாசம் அருகே பண்டாரவாடை என்ற இடத்தில் சென்றபோது, மர்ம நபர்களால் கல்வீசி தாக்கப்பட்டதில், பேருந்தின் கண்ணாடி உடைந்தது. இதுகுறித்து பாபநாசம் போலீஸார் விசாரித்து வருகின்றனர். கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறைக்கு புதன்கிழமை இரவு சென்ற அரசு பேருந்தை மர்ம நபர்கள் நரசிங்கன்பேட்டை என்ற இடத்தில் கல்வீசி தாக்கினர். இதில் பேருந்தின் முகப்பு கண்ணாடி நொறுங்கியது. இதுதொடர்பாக திருவிடைமருதூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com