சுங்கச் சாலைப் பணி மே மாதம் நிறைவு பெறும்: மாவட்ட ஆட்சியர்

கடலூர் செம்மண்டலம் முதல் பட்டாம்பாக்கம் வரை நடைபெற்று வரும் சுங்கச் சாலைப் பணிகள் வருகிற மே மாதத்துக்குள் நிறைவடையும் என மாவட்ட ஆட்சியர் த.பொ.ராஜேஷ் தெரிவித்தார்.

கடலூர் செம்மண்டலம் முதல் பட்டாம்பாக்கம் வரை நடைபெற்று வரும் சுங்கச் சாலைப் பணிகள் வருகிற மே மாதத்துக்குள் நிறைவடையும் என மாவட்ட ஆட்சியர் த.பொ.ராஜேஷ் தெரிவித்தார்.
ஒருங்கிணைக்கப்பட்ட மற்றும் ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்டத்தின் கீழ் 12.4 கி.மீ நீளத்தில் இந்தச் சாலைப் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத், மாவட்ட ஆட்சியர் த.பொ.ராஜேஷ் ஆகியோர் சனிக்கிழமை ஆய்வு செய்தனர்.
அப்போது, சாலையின் இறுதிப் பகுதியில் மேல்பட்டாம்பாக்கத்தில் சாலைக்கு தேவையான 10 சென்ட் நிலத்தை, நில உரிமையாளரிடம் பேசி அமைச்சர் பெற்றுத்தந்தார். மேலும், சாலைப் பணிகள் எப்போது நிறைவடையுமென ஆட்சியரிடம் கேட்டறிந்தார். அப்போது, வரும் மே மாத இறுதிக்குள் சாலைப் பணிகளை முடித்து மக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டுவர தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஆட்சியர் உறுதியளித்தார். ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பெ.ஆனந்த்ராஜ், செயற்பொறியாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com