சுதந்திர தினத்தன்று கிராம சபைக் கூட்டம்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் வருகிற 15-ஆம் தேதி சிறப்பு, கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டுமென மாவட்ட ஆட்சியர் த.பொ.ராஜேஷ் உத்தரவிட்டார்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் வருகிற 15-ஆம் தேதி சிறப்பு, கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டுமென மாவட்ட ஆட்சியர் த.பொ.ராஜேஷ் உத்தரவிட்டார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து தனி அலுவலர்களும், சுதந்திர தினத்தை முன்னிட்டு வருகிற 15-ஆம் தேதி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டத்தை நடத்த வேண்டும்.
கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ள இடம், தேதி, நேரம் மற்றும் விவாதப் பொருள்கள் பற்றி ஊராட்சி மன்றக் கட்டடத்திலும், தொலைக்காட்சி அறை மற்றும் சமுதாயக்கூட கட்டடங்களிலும் மக்களின் பார்வையில் தெரியும்படி விளம்பர பலகையில் எழுதியும் மற்றும் துண்டுப் பிரசுரங்கள் மூலமாகவும் விளம்பரப்படுத்த வேண்டும்.
இந்தக் கூட்டத்தில், குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்துதல், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டம், ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், அதில் எடுக்கப்பட்ட பணிகள், அதன் தற்போதைய நிலவரம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், ஊராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகள், மகளிர் திட்டம் மற்றும் ஊராட்சி மன்றத் தனி அலுவலரால் கொண்டு வரப்படும் இதர பொருள்கள் குறித்தும் விவாதிக்கலாம்.
எனவே, பொதுமக்கள் அந்தந்த ஊராட்சிகளில் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டுமென ஆட்சியர் அதில் கேட்டுக்கொண்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com