போராட்ட அறிவிப்பு: அதிகாரிகள் சமரசம்

கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்ட வலியுறுத்தி, 15 கிராம மக்களின் போராட்ட முடிவை அடுத்து, வட்டாட்சியர் தலைமையில் சமாதானக் கூட்டம் நடைபெற்றது.

கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்ட வலியுறுத்தி, 15 கிராம மக்களின் போராட்ட முடிவை அடுத்து, வட்டாட்சியர் தலைமையில் சமாதானக் கூட்டம் நடைபெற்றது.
காட்டுமன்னார்கோவில் அருகே கொள்ளிடம் ஆற்றில் ம.ஆதனுôர் - குமாரமங்கலம் இடையே ரூ.400 கோடியில் தடுப்பணை கட்டப்படும் என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா
அவரது ஆட்சிக் காலத்தில் சட்டப்பேரவையில் 110 விதியின்கீழ் அறிவித்தார். அதற்கான இடத்தையும் பொதுப்பணித் துறையினர் தேர்வு செய்து, அங்கு பூமி பூஜையும் நடந்தது. ஆனால் இதுவரை பணிகள் தொடங்கவில்லை. இதனைக் கண்டித்து விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கொள்ளிடக்கரை கிராமங்களான எய்யலுôர், சிறுகாட்டூர், ஆச்சாள்புரம் உள்ளிட்ட 15 கிராமங்களில் ஆற்றில் ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து சிதம்பரம், கடலூர் நகரங்களுக்கு குடி நீர் கொண்டு செல்லப்படுகிறது. இதனால் இப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் சரிந்து, குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. மேலும், மற்ற ஆழ்துளைக் கிணறுகள் செயலிழந்து விவசாயப் பணிகள் பாதிக்கப்பட்டது. இதனால் இப்பகுதி விவசாயிகள், ஆற்றில் தடுப்பணை கட்டிய பிறகே குடிநீர் திட்டத்துக்கு தண்ணீர் கொண்டுசெல்ல வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, விவசாயிகள் பாதுகாப்பு இயக்கம், அனைத்து விவசாயிகள் சங்கம் ஆகியன சார்பில், ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்குள் (சுதந்திர தினம்) தடுப்பணை கட்டுமானப் பணியை தொடங்க வேண்டும். இல்லையெனில் கொள்ளிடக்கரை கிராமங்களில் கருப்புக்கொடி ஏற்றி சுதந்திர தினத்தைப் புறக்கணித்து போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து காட்டுமன்னார்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் ஜெயந்தி தலைமையில் சமாதானக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மணவாளன், சக்திவேல், வழக்குரைஞர் ராதாகிருஷ்ணன், பாலு, மதியழகன், செந்தில்குமார், சரவணன், இளந்தமிழன், மணவைமாறன், பொதுப்பணி துறை அலுவலர் ஜெயராஜ், காவல் ஆய்வாளர் ஷியாம்சுந்தர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், பணி தொடங்குவது குறித்து அரசு முறையான அறிவிப்பு வெளியிட்டால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும் என கிராம மக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து, மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவிப்பதாக வட்டாட்சியர் கூறினார். ஆனால், சுதந்திர தினத்தன்று திட்டமிட்டபடி ஆச்சாள்புரம், எய்யலுôர், குச்சிப்பாளையம் உள்ளிட்ட 15 கிராம மக்கள் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம் நடத்த உள்ளதாகத் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com