கடலூர் துறைமுகத்தில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு

கடலூர் துறைமுகத்தில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு புதன்கிழமை ஏற்றப்பட்டது.

கடலூர் துறைமுகத்தில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு புதன்கிழமை ஏற்றப்பட்டது.
 ஆந்திரம் மாநிலம் மசூலிப்பட்டினத்துக்கு 1,160 கி.மீ. தென்கிழக்கே வங்கக் கடலில் புதன்கிழமை காலை 8.30 மணிக்கு காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இது வரும் 48 மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும். பின்னர் ஆந்திரம் நோக்கி நகரும். எனினும் கரையைக் கடக்கும் போது வலுவிலக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லையென கருதப்படுகிறது. எனினும், தொலைதூரத்தில் புயல் உருவாகி இருப்பதை குறிக்கும் வகையில் புயல் தூர எச்சரிக்கையான கொடி எண்-1 புதன்கிழமை மதியம் ஏற்றப்பட்டது.
 இந்த நிலையில், புதன்கிழமை காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் பண்ருட்டியில் மட்டும் 18.30 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. மேலும், மாவட்டம் முழுவதும் வறண்ட வானிலையே காணப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com