காமராஜர் பிறந்த நாள்: அரசியல் கட்சியினர், அமைப்பினர் மரியாதை

காமராஜரின் 115-ஆவது பிறந்த தினவிழா கடலூர் மாவட்டத்தில் அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினரால் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

காமராஜரின் 115-ஆவது பிறந்த தினவிழா கடலூர் மாவட்டத்தில் அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினரால் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு கடலூரில் உள்ள அவரது சிலைக்கு காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் எம்.ஆர்.ராதாகிருஷ்ணன், வழக்குரைஞர் ஏ.எஸ்.சந்திரசேகரன், நகரத் தலைவர் என்.குமார், ஓவியர் ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்டத் தலைவர் அ.ஞானச்சந்திரன் தலைமையில் மக்களவை முன்னாள் உறுப்பினர் பி.ஆர்.எஸ்.வெங்கடேசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நகரத் தலைவர் ரகுபதி, பொதுச் செயலர் அலமு தங்கவேல், மகளிரணி பத்மினி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நாடாளுமன்ற தொகுதிச் செயலர் பா.தாமரைச்செல்வன் தலைமையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாநில அமைப்புச் செயலர் தி.ச.திருமார்பன், நிர்வாகிகள் கலைச்செல்வன், சம்பத், சசிதரன், சுரேஷ்பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சிவாஜி சமூக நலப் பேரவை சார்பில் மாவட்ட பொதுச் செயலர் கே.சிவாஜிகணேசன் தலைமையில் மாவட்டத் தலைவர் க.தர்மராஜ் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். காமராஜர் மக்கள் நலப் பேரவை சார்பில் மாவட்ட ஆலோசகர் சக்திவேல் தலைமையில் கெளரவத் தலைவர் ராம.முத்துக்குமரனார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்புல மாணவர்கள் ஆதிநாராயணபுரத்தில் 45 நாள்கள் முகாமிட்டு களஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த மாணவர்கள் காமராஜர் பிறந்த நாளை அங்குள்ள அரசு தொடக்கப் பள்ளியில் கொண்டாடினர். பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தினர். பள்ளி தலைமை ஆசிரியர் டி.கனகராசு பரிசு வழங்கினார்.
சிதம்பரம்: சிதம்பரத்தில் நகர தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் கீழரத வீதியில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து அன்னதானம் வழங்கி கொண்டாடப்பட்டது. நகரத் தலைவர் தில்லை ஆர்.மக்கீன் தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் எஸ்.கே.வைத்தி, ராஜா.சம்பத்குமார், பாபு.சந்திரசேகர், கே.நாகராஜன் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞரணி தலைவர் கே.ரஜினிகாந்த் வரவேற்றார். கடலூர் மத்திய மாவட்டத் தலைவர் ஏ.ராதாகிருஷ்ணன் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து அன்னதானம் வழங்கினார். பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டு, புத்தகம் வழங்கப்பட்டது. தமாகா மாநிலச் செயலர் ஏ.எஸ்.வேல்முருகன் இனிப்பு வழங்கி தமாகா கொடியை ஏற்றி வைத்துப் பேசினார். நிர்வாகிகள் பாலசுந்தர், குமார் இன்பரசு, கே.தில்லைசெல்வி, ஆர்.சுப்புலட்சுமி, மாவட்ட மகளிரணி தலைவர் கே.ராஜலட்சுமி, என்.இளங்கோவன், ஆர்.வி.சின்ராஜ், ஆறுமுகம், ஆட்டோ டி.குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாவட்ட தொண்டரணி தலைவர் தில்லை கோ.குமார் நன்றி கூறினார்.
சிதம்பரம் வீனஸ் குழும பள்ளிகள் சார்பில் கல்வி வளர்ச்சி நாள் விழா கொண்டாடப்பட்டது. தாளாளர் வீனஸ் எஸ்.குமார் தலைமை வகித்தார். மேல்நிலைப்பள்ளி முதல்வர் ரூபியாள்ராணி முன்னிலை வகித்தார். சிதம்பரம் காமராஜர் பேரவை தலைவர் லட்சுமணன், செயலர் ஜீவா.விஸ்வநாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று காமராஜரின் சிறப்புகள் பற்றி பேசினர். பள்ளி கல்வி அதிகாரி ஜி.மகேஷ்சுந்தர் காமராஜர் உருவப் படத்துக்கு மாலை அணிவித்தார். விழாவில் காமராஜர் பேரவைக்கு நிரந்தர வங்கிக் கணக்கு தொடங்க ரூ.5 ஆயிரத்தை பேரவைத் தலைவர் லட்சுமணனிடம், பள்ளி தாளாளர் வீனஸ் எஸ்.குமார் வழங்கினார். போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
சிதம்பரம் மத்திய ரோட்டரி சங்கம் சார்பில் அரசு நந்தனார் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்பட்டது. சென்ட்ரல் ரோட்டரி சங்கத் தலைவர் பி.முகமதுயாசின் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் பி.ராஜசேகரன் வரவேற்றார். பொருளர் ஆர்.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார்.
நிர்வாகிகள் ஏ.முகமது இப்ராஹீம், பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் டி.ஜெயராமன், ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரையாற்றினார். செயலர் எம்.தீபக்குமார் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com