"என்எல்சி தொழிலாளர் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும்'

நெய்வேலியில் சுரங்கம் 1-ஏ ஒப்பந்தத் தொழிலாளர்கள் போராட்டத்தை என்எல்சி நிர்வாகம் முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என,

நெய்வேலியில் சுரங்கம் 1-ஏ ஒப்பந்தத் தொழிலாளர்கள் போராட்டத்தை என்எல்சி நிர்வாகம் முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என, தொமுச அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 தொமுச தலைவர் வீர.ராமசந்திரன் தலைமை வகித்தார். பொதுச் செயலர் சுகுமாறன், பொருளாளர் குருநாதன் முன்னிலை வகித்தனர். கடலூர் மேற்கு மாவட்ட திமுக செயலரும், சட்டப்பேரவை உறுப்பினருமான சி.வெ.கணேசன், நெய்வேலி சட்டப்பேரவை உறுப்பினர் சபா.ராஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்.
 அப்போது அவர்கள், "புதன்கிழமைக்குள் தொழிலாளர்கள் பிரச்னைக்குத் தீர்வு காண
 என்எல்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் தொழிலாளர்கள் போராட்டத்துக்கு திமுக ஆதரவு அளிக்கும். இந்த பிரச்னை தொடர்பாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கவனத்துக்குக் கொண்டு சென்று சட்டப்பேரவையில் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.
 கூட்டத்தில், சுரங்கம் 1-ஏ ஒப்பந்தத் தொழிலாளர் பிரச்னையை என்எல்சி நிர்வாகம் தீர்வு காண வேண்டும். வீடு, நிலத்தை வழங்கிய அனைத்துப் பகுதி ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கும் மாதத்துக்கு 26 நாள்கள் வேலை என்பதை உறுதி செய்ய வேண்டும். மத்திய அரசு அறிவித்த சம்பள விகிதத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 நிகழ்ச்சியில், நகரப் பொறுப்புக் குழுத் தலைவர் பக்கிரிசாமி, பொதுக் குழு உறுப்பினர் தண்டபாணி, தொமுச ஒப்பந்தத் தொழிலாளர்கள் சங்கத்தின் செயலர் பழனிவேல், பொருளாளர் ஸ்டாலின், அலுவலகச் செயலர் ஹென்றி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com