கடலூரில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

கோயில்களில் தரிசனக் கட்டணத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, கடலூரில் இந்து முன்னணியினர் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோயில்களில் தரிசனக் கட்டணத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, கடலூரில் இந்து முன்னணியினர் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 கோயில்களில் வசூலிக்கப்படும் தரிசனக் கட்டணத்தை ரத்து செய்ய ணேண்டும். பக்தர்கள் கோயிலுக்குச் செலுத்தும் காணிக்கையை கலாசாரம், கல்வி, ஆன்மிகப் பணிகளுக்குச் செலவிட வேண்டும். இந்து ஆலயங்களையும், அதன் சொத்துகளையும் பராமரிக்க ஓய்வு பெற்ற நீதிபதிகள், ராணுவ அதிகாரிகள், சமய சான்றோர்கள், இந்து இயக்க பிரதிநிதிகள் கொண்ட நலவாரியம் அமைத்து அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இந்துக்களின் ஆலய நிலங்கள் மற்றும் கடைகளை மற்ற மதத்தினர் பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டும். ஆக்கிரமிப்பிலுள்ள கோயில் நிலங்களை மீட்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணி அமைப்பின் மாநிலச் செயலர் கிருஷ்ண.கதிரவன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார். இதில், திரளான இந்து முன்னணியினர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com