கல்வி நிலையங்களில் காமராஜர் பிறந்த நாள் விழா

நெய்வேலி, கடலூர் பகுதிகளில் உள்ள கல்வி நிலையங்களில் காமராஜரின் 115-ஆவது பிறந்த நாள் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

நெய்வேலி, கடலூர் பகுதிகளில் உள்ள கல்வி நிலையங்களில் காமராஜரின் 115-ஆவது பிறந்த நாள் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
 பெண்ணாடம் ஜெயசக்தி பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு பெற்றோர் -ஆசிரியர் கழகத் தலைவர் வீரபாண்டியன் தலைமை வகித்தார். தாளாளர் கவிதா சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். பள்ளி மாணவர்கள் பங்கேற்ற கல்வி வளர்ச்சி நாள் விழிப்புணர்வுப் பேரணியை கிராம நிர்வாக அலுவலர் பினுகுட்டன் கொடி அசைத்துத் தொடக்கி வைத்தார். ஆசிரியைகள் கல்பனா, வரலட்சுமி, சுகன்யா, தீபசுந்தரி, எழிலரசி, ரம்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 காடாம்புலியூர் ராஜகுரு மெட்ரிக். பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு பள்ளியின் தாளாளர் குருநாதன் தலைமை வகித்துப் பேசினார். முதல்வர் பிரியா முன்னிலை வகித்தார். மாணவர்களுக்குப் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. தலைமை ஆசிரியை தனலட்சுமி நன்றி கூறினார்.
 வடலூர், புதுநகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு தலைமை ஆசிரியர் ஆர்.திருமுருகன் தலைமை வகித்தார். உதவித் தலைமை ஆசிரியர் சி.மதியழகன் முன்னிலை வகித்தார். ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற ஏ.மணிகண்டன், முன்னாள் எம்எல்ஏ. ஆர்.சுந்தரமூர்த்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு பேசினர். பின்னர், பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
 அரசுப் பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு வடலூர் நுகர்வோர் உரிமை - சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பேரவை சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அரிமா சங்கம் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன. வி.எம்.எஸ்.சங்கரன் சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு சில்வர் தட்டுகளை வழங்கினார்.
 நிகழ்ச்சியில் பெற்றோர்- ஆசிரியர் கழகத் தலைவர் வி.மணி, பொருளாளர் எஸ்.ரகோத்தமன், ஞானசேகரன், பிரம்மநாயகம், சந்திரகாசு, சரவணன், சந்திரசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சி.பழனிவேல் நன்றி கூறினார்.
 வடலூர் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்பட்டது.
 பள்ளியின் தாளாளர் ஆர்.செல்வராஜ் தலைமை வகித்தார். நிகழ்வில் காமராஜர் உருவப் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. ஏ.மணிகண்டன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
 தலைமை ஆசிரியர்கள் இளங்கோ, மாணிக்கம், பெற்றோர் - ஆசிரியர் கழகத் தலைவர் ராமானுஜம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 கடலூரில்...
 மங்களூர் ஊராட்சி ஒன்றியம், ரெட்டாக்குறிச்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் ப.கதிரவன் தலைமை வகித்தார். முன்னாள் ஊராட்சித் தலைவர் செந்தில்குமார், பெற்றோர்- ஆசிரியர் கழகத் தலைவர் சி.மாரிமுத்து, பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் வசந்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 ஆசிரியர்கள் காமராஜரின் வாழ்க்கையில் நடைபெற்ற நிகழ்வுகளைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு எடுத்துக் கூறினர். "காமராஜரின் கல்விச் சாதனைகள்' என்ற தலைப்பில் மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, கவிதை, ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.
 நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியை வசந்தகுமாரி நன்றி கூறினார்.
 அதேபோல, குறிஞ்சிப்பாடி ஒன்றியம், வெங்கடாம்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற காமராஜர் பிறந்த நாள் விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் ஆர்.சுப்ரமணியன் தலைமை வகித்து காமராஜர் உருவப் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
 மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.
 விழாவில் ஆசிரியர்கள் கிருஷ்ணவேணி, லதா, முருகவேல், ராஜன்பாபு, சங்கரநாராயணன், ரமேஷ், குமுதவல்லி, பிரவினா, மணிவண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். என்எஸ்எஸ் திட்ட அலுவலர் சுந்தர்ராஜன் விழாவுக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com