காந்தி மன்ற பொதுக்குழுக் கூட்டம்

சிதம்பரம் வாகீசநகரில் காந்தி மன்ற பொதுக்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சிதம்பரம் வாகீசநகரில் காந்தி மன்ற பொதுக்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 மன்றப் பொருளாளர் எஸ்.சிவராமசேது தலைமை வகித்தார். முனைவர் மு.ஞானம் வரவேற்றார். காந்தி மன்றத் நிறுவனத் தலைவர் பொன்.குஞ்சிதபாதம் மறைவைத் தொடர்ந்து புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மன்றத் தலைவராக மு.ஞானம், செயலராக கே.ஜானகிராமன், பொருளாளராக எஸ்.சிவராமசேது, துணைச் செயலராக வி.முத்துக்குமரன், மன்ற செயற்குழு உறுப்பினர்களாக டாக்டர் ஆர்.முத்துக்குமரன், ஆர்.கே.சிவக்குமார், கே.,சேதுமாதவன், நா.சின்னதுரை, வனஜாதில்லைநாயகம் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மன்ற துணைச் செயலர் வி.முத்துக்குமரன் நன்றி கூறினார்.
 தீர்மானங்கள்: ஆகஸ்டு 15-ஆம் தேதி சிதம்பரம் நகரப் பள்ளி மாணவர்களுக்கு இடையே போட்டிகளை நடத்துவது, காந்தி ஜெயந்தி விழாவைச் சிறப்பாகக் கொண்டாடுவது, காந்தியடிகளின் 150-ஆவது ஆண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடுவது, காந்தி மன்றக் கட்டடத்தில் ஏழைப் பெண்கள் பயன்பெறும் வகையில் இலவச தையல் பயிற்சி வகுப்புகள் நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com