என்எல்சி-யில் தொழில் பழகுநர் பயிற்சி பெற்றவர்கள் சான்றிதழை ஆட்சியரிடம் ஒப்படைக்க முடிவு

என்எல்சி-யில் தொழில் பழகுநர் பயிற்சி முடித்தவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் சான்றிதழை ஒப்படைக்க முடிவு செய்துள்ளனர்.

என்எல்சி-யில் தொழில் பழகுநர் பயிற்சி முடித்தவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் சான்றிதழை ஒப்படைக்க முடிவு செய்துள்ளனர்.
 என்எல்சி இந்தியா நிறுவனத்தில் தொழில் பழகுநர் பயிற்சி பெற்றவர்களின் ஆலோசனைக் கூட்டம் இந்திரா நகரில் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு, முதன்மை ஒருங்கிணைப்பாளர் சரவணன் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம், பரணிதரன், குமரவேல், அய்யப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குணேசகரன் வரவேற்றார்.
 தீர்மானங்கள்: என்எல்சி இந்தியா நிறுவனத்தில் தொழில் பழகுநர் பயிற்சி முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதுகுறித்து பல போராட்டங்களை நடத்தியும் என்எல்சி நிர்வாகமும், மத்திய, மாநில அரசுகளும் கண்டுகொள்ளவில்லை. எனவே, இதனைக் கண்டித்து, தொழில் பழகுநர் சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை, வேலைவாய்ப்பு அட்டை ஆகியவற்றை மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை (ஜூன் 19) ஒப்படைப்பது.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com