உலக யோகா தினம்: ஆட்சியர் பங்கேற்பு

கடலூர் மாவட்டத்தில் உலக யோகா தினம் புதன்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

கடலூர் மாவட்டத்தில் உலக யோகா தினம் புதன்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
 தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், கடலூர் யோகாசன சங்கம் சார்பில் கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் நடைபெற்ற உலக யோகா தினத்தை கடலூர் மாவட்ட ஆட்சியர் த.பொ.ராஜேஷ் தலைமை வகித்து தொடக்கி வைத்தார்.
 விழாவில் ஆட்சியர் பேசியதாவது: மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு தினமும் யோகா பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. யோகாவினால் உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதோடு, கல்வியையும் சிறப்பாக பயில முடியும். யோகா பயிற்சியை இடைவிடாமல் செய்து வரவேண்டும். யோகா என்பது மொழி, மதம், இனத்துக்கு அப்பாற்பட்டதாகும். எனவே, பள்ளி மாணவ, மாணவிகள் யோகா பயிற்சி பெறுவதைப் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார். இந்தப் பயிற்சியில் 30-க்கும் மேற்பட்ட பள்ளியிலிருந்து சுமார் 1,200 மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு - இளைஞர் நலன் அலுவலர் மா.ராஜா, யோகா பயிற்றுர்கள் கோ.வெற்றிவேல், எஸ்.கிறிஸ்டினா லாரன்ஸ், யோகாசன சங்கச் செயலர் ஜெ.சுவாமிநாதன், சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
 நேரு இளையோர் மையம்: கடலூர் தூய வளனார் கல்லூரி அரங்கில் நேரு இளையோர் மையம் - விளையாட்டு அமைச்சகம் சார்பில், யோகா தினம் கடைப்பிடிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் த.பொ.ராஜேஷ் தலைமை வகித்து யோகாசன பயிற்சிகளை மேற்கொண்டு யோகா பயிற்சியாளர்களுக்கும், மாணவர்களுக்கும் சான்றிதழ்களை வழங்கினார். யோகா மருத்துவர் யோகி ஏ.ஜீவானந்தம், கிரிடா பாரதி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.சீனுவாசன் ஆகியோர் யோகா பயிற்றுவித்தனர்.
 புனித வளனார் கல்லூரி செயலர் ஜி.பீட்டர் ராஜேந்திரம், கல்லூரி முதல்வர் எஸ்.சின்னப்பன், துணை முதல்வர் எம்.அருமைச்செல்வம், மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் பி.அருள்நாதன், நாட்டு நலப் பணித் திட்ட மாவட்ட தொடர்பு அலுவலர் சி.திருமுகம், பிளஸ் தொண்டு நிறுவனர் எல்.எஸ்.அந்தோணிசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். நேரு இளையோர் மைய மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எம்.ஹெலன்ராணி வரவேற்க, கணக்காளர் டி.சக்கரவர்த்தி நன்றி கூறினார்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com