தண்ணீர் பந்தல்கள் திறப்பு

கடலூர், நெய்வேலி, சிதம்பரம் ஆகிய பகுதிகளில் அதிமுக ஓபிஎஸ் அணியினர் சார்பில், புதன்கிழமை தண்ணீர் பந்தல்கள் திறக்கப்பட்டன.

கடலூர், நெய்வேலி, சிதம்பரம் ஆகிய பகுதிகளில் அதிமுக ஓபிஎஸ் அணியினர் சார்பில், புதன்கிழமை தண்ணீர் பந்தல்கள் திறக்கப்பட்டன.
 திருப்பாதிரிபுலியூரில் அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தலை மாவட்ட அவைத் தலைவர் கோ.அய்யப்பன் தலைமை வகித்து திறந்து வைத்தார். பின்னர், பொதுமக்களுக்கு மோர், குளிர்பானங்கள், இளநீர், தர்பூசணி, குடிநீர் ஆகியவற்றை அவர் வழங்கினார்.
 நிகழ்ச்சியில், கூட்டுறவு சங்கத் தலைவர் தி.ரவிச்சந்திரன், ஆதி.பெருமாள், எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலர்கள் ஸ்ரீதர், ராஜீ, கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 பண்ருட்டியில்...: பண்ருட்டியில் ஓபிஎஸ் அணியினர் சார்பில், பயணியர் விடுதி, அரசு மருத்துவமனை ஆகிய இரண்டு இடங்களில் நீர் - மோர் பந்தல்கள் திறக்கப்பட்டன.
 கடலூர் மாவட்ட அவைத் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான கோ.அய்யப்பன் தலைமை வகித்து, நீர் - மோர் பந்தலைத் திறந்து வைத்தார். முன்னாள் கவுன்சிலர்கள் எஸ்.தியாகராஜன், ராமலிங்கம், அப்துல் சமது, கூட்டுறவு சங்க இயக்குநர் வேலாயுதம், விநாயகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 காட்டுமன்னார்கோவிலில்...: காட்டுமன்னார்கோவில் ஓபிஎஸ் அணி சார்பில் நீர் - மோர் பந்தல் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகரப் பொருளாளர் எம்.வசந்தகுமார் தலைமை வகித்தார். மருத்துவர் பாலசுப்பிரமணியன், சுவாமிநாதன், கலியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பன்னீர்செல்வம் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் கே.கே.கலைமணி பங்கேற்று, நீர் - மோர் பந்தலைத் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் முன்னாள் எம்பி பு.தா.இளங்கோவன், முன்னாள் எம்எல்ஏ பி.எஸ்.அருள் ஆகியோர் பங்கேற்றுப் பேசினர். காட்டுமன்னார்கோவில் நகரப் பகுதியில் மூன்று இடங்களில் நீர் - மோர் பந்தல்கள் திறக்கப்பட்டன. நிர்வாகிகள் புத்தூர் சிவக்குமார், சங்கர், ஜான்சன், நெல்சன், ஜாகீர்உசேன், ராஜேந்திரன், சென்பகராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முகம்மது ரபீக் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com