உடல் தானம் மற்றவர்களை வாழ வைக்கும்: என்எல்சி இயக்குநர்

ஒருவரின் உடல் தானம் மற்றவர்களை வாழ வைக்கும் என என்எல்சி இந்தியா நிறுவன இயக்குநர் (மனித வளம்) ஆர்.விக்ரமன் கூறினார்.

ஒருவரின் உடல் தானம் மற்றவர்களை வாழ வைக்கும் என என்எல்சி இந்தியா நிறுவன இயக்குநர் (மனித வளம்) ஆர்.விக்ரமன் கூறினார்.

 என்எல்சி இந்தியா நிறுவனம், நெய்வேலி மூத்த குடிமக்கள் நல அமைப்பு இணைந்து நடத்திய உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு முகாம் வடக்குத்து முல்லை மழலையர் ஆரம்பப் பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட என்எல்சி இந்தியா நிறுவன இயக்குநர் (மனித வளம்) ஆர்.விக்ரமன் குத்துவிளக்கேற்றி முகாமை தொடக்கி வைத்துப் பேசியதாவது: மூளைச் சாவு அடைந்தவர்கள், உயிரிழந்தவர்களின் உடல் உறுப்புகளை தானம் செய்வதன் மூலம் மற்றவர்களை வாழவைக்க முடியும். ஒருவர் தனது உடலை தானமாக வழங்க முன்வந்திருந்தாலும், அவர் இறந்த பின்னர் அவரது குடும்பத்தினர் இசைவு தெரிவித்தால் மட்டுமே உடல் உறுப்புகளை தானமாகப் பெற முடியும். எனவே, குடும்பத்தினரை மனமுவந்து ஏற்றுக்கொள்ளுமாறு கூற வேண்டும்.

உடல் தானம் அளிப்பது இந்தியாவில் .05 முதல் ஒரு சதவீதம் வரை மட்டுமே உள்ளது. மேலை நாடுகளில் 70-80 சதவீதம் வரை உடல்தானம் அளிக்கப்படுகிறது. இதற்குக் காரணம் அங்கு இறந்தவர்களின் உடல் அரசுக்குச் சொந்தம். உயிரிழந்த ஒருவரின் உடல் உறுப்புகளை தானம் செய்வதன் மூலம் குறைந்தபட்சம் 8 பேரை வாழவைக்க முடியும்.

என்எல்சி சார்பில் முதியோர் இல்லம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மூத்த குடிமக்களுக்கு என்எல்சி நிறுவனம் உதவி செய்து வருகிறது என்றார் அவர்.
 நிகழ்ச்சியில், ஹெல்ப் ஏஜ் இந்தியா தலைமை திட்ட மேலாளர் வேணுகோபால் ராமலிங்கம், நெய்வேலி மூத்த குடிமக்கள் நல அமைப்பின் கெளரவத் தலைவர் கோ.ஜெகன் ஆகியோர் முன்னிலை வகித்துப் பேசினர். என்எல்சி பொது மருத்துவமனை முதன்மை பொது கண்காணிப்பாளர் பி.ரவி உடல் தானம் குறித்து விளக்கிப் பேசினார்.

நெய்வேலி மூத்த குடிமக்கள் நல அமைப்புத் தலைவர் எம்.பலராமன், செயலர் டி.வேலாயுதம், பொருளர் வி.வடிவேலு, பள்ளித் தாளாளர் உமாபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com