கோயில்களில் சிறப்பு தரிசன அனுமதி கோரி மாற்றுத் திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

கோயில்களில் சிறப்பு தரிசனத்துக்கு அனுமதி கோரிகடலூரில் மாற்றுத் திறனாளிகள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோயில்களில் சிறப்பு தரிசனத்துக்கு அனுமதி கோரி
கடலூரில் மாற்றுத் திறனாளிகள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோயில்களுக்குச் செல்லும் மாற்றுத் திறனாளிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து செல்ல முடியாத நிலை உள்ளதால், உடனடியாக தரிசனத்துக்கு அனுமதிக்க வேண்டும் என மாற்றுத் திறனாளிகள் வலியுறுத்தி வந்தனர். இதைத் தொடர்ந்து, அனைத்து கோயில்களிலும் உதவியாளருடன் சிறப்பு வழியில் சென்று சுவாமி தரிசனம் செய்யலாம் என கடந்த 2011- ஆம் ஆண்டு தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளதாம். ஆனால், கடலூர் மாவட்டத்தில் திருவந்திபுரம் தேவனாதசுவாமி கோயில் உள்பட பல்வேறு கோயில்களில் அவர்களை சிறப்பு தரிசனத்தில் அனுமதிப்பதில்லையாம்.
எனவே, அரசின் ஆணையை உடனடியாக கோயில்களில் செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மாற்றுத் திறனாளிகள் லட்சிய முன்னேற்ற சங்கத்தின் தலைவர் சி.கே.சந்தோஷ் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே அந்த அமைப்பினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, அவர்கள் தங்களது நெற்றியில் விபூதி பட்டை தரித்தும், கைகளில் தெய்வங்களின் உருவப்படங்களைத் தாங்கியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த அமைப்பின் பொதுச் செயலர் பொன்.சண்முகம் கண்டன உரையாற்றினார். நிர்வாகிகள் தட்சிணாமூர்த்தி, சித்ரா, ஆறுமுகம், பாலமுருகன், தில்லைநாயகம், அமரேசன், ஜெயபாலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர், தங்களது கோரிக்கையை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுவாக  அளித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com