துப்புரவுப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு சாதனம் வழங்க வலியுறுத்தல்

துப்புரவுப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு சாதனம் வழங்கக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

துப்புரவுப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு சாதனம் வழங்கக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
 கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில், சிஐடியூ மாவட்டச் செயலர் பி.கருப்பையன், உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் மாவட்டச் செயலர் பி.ராஜேந்திரன் ஆகியோர் துப்புரவுப் பணியாளர்களுடன் வந்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: உள்ளாட்சி அமைப்புகளில் துப்புரவுப் பணியில் சகிப்புத் தன்மையுடன் ஈடுபட்டு வரும் ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு தீர்த்து வைக்க வேண்டும். அவர்களுக்கு பாதுகாப்பு சாதனங்களை காலதாமதமின்றி வழங்க வேண்டும்.
 துப்புரவுப் பணியாளர்களுக்கு ஏற்படும் உடல் உபாதைகளுக்கு உள்ளாட்சி நிர்வாகங்களே முழுப் பொறுப்பேற்று, மருத்துவ வசதியை உடனுக்குடன் செய்துத் தர வேண்டும்.
அடையாள அட்டை, ஆண்டுக்கு 4 செட் சீருடைகள், தையல் கூலி, சலவைப்படி, உடல் சுத்தம் செய்வதற்கான சோப் ஆகியவற்றை வழங்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளபடி ஒருநாள் ஊதியமாக ரூ.300
வழங்க வேண்டும். கடலூர் நகராட்சியில் 2 மாதங்களாக சம்பள பாக்கி உள்ளது. இதுபோன்ற நிலையை தவிர்த்து, பிரதிமாதம் 10-ஆம் தேதிக்குள் ஊதியம் வழங்க வேண்டும்.
 வாரம் ஒருநாள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிப்பதோடு, பணிநேரத்தில் உணவு உண்பதற்கு நேரம் ஒதுக்க வேண்டும்.
பணி செய்யும் இடங்களில் மக்கள் தொகைக்கேற்ப கூடுதல் ஊழியர்களை நியமிக்க வேண்டும். துப்புரவுப் பணியில் ஈடுபடும் அனைவருக்கும், கான்கிரீட் வீடு கட்டித்தர வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com