மேலிருப்பு ஊராட்சியில் தேங்கிய மழைநீர்

மேலிருப்பு ஊராட்சியில் தேங்கி நிற்கும் மழை நீரால் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

மேலிருப்பு ஊராட்சியில் தேங்கி நிற்கும் மழை நீரால் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

பண்ருட்டி ஒன்றியத்துக்கு உள்பட்ட மேலிருப்பு ஊராட்சியில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள தெற்குத் தெருவில் அமைக்கப்பட்டிருந்த சிமென்ட் சாலை 2015-ஆம் ஆண்டு ஏற்பட்ட  பலத்த மழையால் சேதம் அடைந்தது. இதையடுத்து இப்பகுதி மக்கள் தங்களது வீட்டு வாசல் முன் மண்ணை கொட்டி மேடாக்கிக் கொண்டனர்.
இதனால் வடிகால் அடைபட்டு மழைநீர் செல்ல வழியின்றி தெருவில் தேங்கிக் கிடப்பதால் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மழை நீரை கடந்து செல்லும் கிராம மக்கள், மாணவர்கள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.
இதுகுறித்து மேலிருப்பு கிராமத்தைச் சேர்ந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்க வட்டச் செயலர் ஆர்.மதியழகன் கூறியதாவது:
தெற்கு தெரு சாலையில் பல நாள்களாக மழை நீர் தேங்கியுள்ளது. இங்கு உரிய வடிகால் வசதி இல்லை. மழைநீர் தேங்கியுள்ளதால் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து நோய் பரவும் சூழல் ஏற்பட்டுள்ளது. தேங்கியுள்ள தண்ணீரின் மையப் பகுதியில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதில் விழுந்து பலர் காயமடைந்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com