என்எல்சி சுரங்க ஊழியர் முதலுதவி பயிலரங்கம் நிறைவு

என்எல்சி இந்தியா நிறுவன சுரங்க ஊழியர்களுக்கான முதலுதவி குறித்த மூன்று நாள் பயிலரங்கம் வெள்ளிக்கிழமை (அக்.20) தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை

என்எல்சி இந்தியா நிறுவன சுரங்க ஊழியர்களுக்கான முதலுதவி குறித்த மூன்று நாள் பயிலரங்கம் வெள்ளிக்கிழமை (அக்.20) தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை
என்எல்சி கற்றல் மற்றும் மேம்பாட்டு பயிற்சி மையத்தில் நடைபெற்றது.
 செயின்ட் ஜான் ஆம்புலன்ஸ் நிறுவனம், என்எல்சி இந்தியா மற்றும் தமிழ்நாடு சுரங்கப் பாதுகாப்பு சங்கம் இணைந்து நடத்திய இந்தப் பயிலரங்கில்,
என்எல்சி சுரங்க ஊழியர்கள் 80 பேர், இதர நிறுவன ஊழியர்கள் 29 பேர் என மொத்தம் 109 சுரங்கப் பணியாளர்களுக்கு முதலுதவி குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பயிலரங்கின் நிறைவு விழாவில் தலைமை விருந்தினராக என்எல்சி இந்தியா நிறுவனத் தலைவர் சரத்குமார் ஆச்சார்யா பங்கேற்றுப் பேசுகையில், தொழிற்சாலைகளில் முதலுதவி பயிற்சி அளிப்பதன் அவசியத்தை எடுத்துரைத்தார்.
பின்னர், பயிலரங்கின்போது நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சரத்குமார் ஆச்சார்யா பரிசுகளை வழங்கி, விழா மலரை வெளியிட்டார்.
நிகழ்ச்சியில், என்எல்சி இந்தியா நிறுவன மின் துறை இயக்குநர் வி.தங்கபாண்டியன், சென்னை மண்டல சுரங்கப் பாதுகாப்பு துணை இயக்குநர் ஷ்யாம் மிஸ்ரா, செயின்ட் ஜான் ஆம்புலன்ஸ் அமைப்பின் நெய்வேலி மையச் செயலரும்,
என்எல்சி இந்தியா மருத்துவமனையின் தலைமை மருத்துவருமான பி.ரவி, அந்த அமைப்பின் தலைவரும், என்எல்சி இந்தியா மருத்துவத் துறையின் முன்னாள் தலைமை மருத்துவருமான
கே.ஜனார்த்தனன், என்எல்சி இந்தியா சுரங்கப் பாதுகாப்புத் துறை தலைமைப் பொது மேலாளர் மோகன்ரெட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  செயின்ட் ஜான் ஆம்புலன்ஸ் நெய்வேலி மைய பொருளாளர் வி.சுப்ரமணியன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com