அங்கன்வாடிப் பணி நேர்காணல்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு

கடலூரில் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற அங்கன்வாடிப் பணியிடங்களுக்கான நேர்காணலை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே ஆய்வு செய்தார்.

கடலூரில் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற அங்கன்வாடிப் பணியிடங்களுக்கான நேர்காணலை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே ஆய்வு செய்தார்.
 ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தில் கடலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 527 அங்கன்வாடிப் பணியாளர்கள், 134 குறு அங்கன்வாடிப் பணியாளார்கள், 750 அங்கன்வாடி உதவியாளர்கள் ஆக மொத்தம் 1,411 பணியிடங்களை பூர்த்தி செய்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.
 இதன்படி விண்ணப்பித்தவர்களுக்கான நேர்முகத் தேர்வு கடலூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை தொடங்கியது. 2-ஆம் நாளான வெள்ளிக்கிழமை குறுஅங்கன்வாடி பணியாளர் பணியிடம் மற்றும் அங்கன்வாடி பணியாளர் பணியிடங்களுக்கு நேர்காணல் நடத்தப்பட்டது. இதற்காக 1,700 பேர் வரவழைக்கப்பட்டு அவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன.
 இதில், 14 ஊராட்சி ஒன்றியங்களுக்கும் தனித் தனியாக மேஜைகள் அமைக்கப்பட்டு, தலா ஒரு உதவி இயக்குநர், வட்டார மருத்துவ அலுவலர், குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் ஆகியோர் நியமிக்கப்பட்டு அவர்கள் நேர்காணலை நடத்தினர்.
 இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே ஆய்வு செய்தார். நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டவர்கள் ஊராட்சி ஒன்றியம் வாரியாக தனித் தனி நுழைவாயில் வழியாக அனுமதிக்கப்பட்டனர். சனிக்கிழமை உதவியாளர் பணியிடத்துக்கான நேர்காணல் நடைபெறுகிறது. இதில், மீதமுள்ள 3,800 பேர் அழைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் த.பழனி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com