பண்ருட்டியில் புதுப்பிக்கப்பட்ட காந்தி பூங்கா திறப்பு

பண்ருட்டியில் புதுப்பிக்கப்பட்ட காந்தி பூங்காவை எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.

பண்ருட்டியில் புதுப்பிக்கப்பட்ட காந்தி பூங்காவை எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.
பண்ருட்டி நான்கு முனைச் சந்திப்பு அருகே காந்தி பூங்கா அமைந்துள்ளது. பராமரிப்பின்றி பொலிவிழந்து காணப்பட்ட பூங்காவை சீரமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது, பூங்கா மண்டபத்தில் சாய்ந்த நிலையில் இருந்த காந்தி சிலை, புதிய தொழில்நுட்பத்துடன் நேராக நிமிர்த்தப்பட்டது. இந்தப் பணியின்போது காந்தி சிலை ஐம்பொன்னால் செய்யப்பட்டது என்பது தெரியவந்தது.
இதையடுத்து அந்த சிலை மெருகூட்டப்பட்டது. மேலும், பூங்காவில் நடைபாதை, பொதுமக்கள் இளைப்பார மேடைகள், குழந்தைகளுக்கான விளையாட்டு சாதனங்களும் அமைக்கப்பட்டன. மேலும், அதே பகுதியில் நூலகம், வரி வசூல் மையக் கட்டடமும் கட்டப்பட்டது. இந்தப் பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை திறப்பு விழா நடைபெற்றது. பண்ருட்டி தொகுதி எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி பூங்காவை திறந்து வைத்தார். மேலும், நூலகம், வரி வசூல் மையத்தையும் மக்களின் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில், நகர்மன்ற முன்னாள் தலைவர் பி.பன்னீர்செல்வம், நகராட்சி ஆணையர் (பொ) அ.வெங்கடாசலம், சுகாதார அலுவலர் சக்திவேல், மேலாளர் கிருஷ்ணராஜ், உதவிப் பொறியாளர் சிவசங்கரன், கட்டட ஆய்வாளர் குணசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com