அண்ணாமலைப் பல்கலை.யில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா 

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
 அம்பேத்கர் இருக்கை சார்பில் நடைபெற்ற இந்த விழாவில், இணைப் பேராசிரியர் கே.செüந்திரராஜன் வரவேற்றார். அம்பேத்கரின் உருவப் படத்துக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் செ.மணியன் மலர்தூவி மரியாதை செலுத்தி தொடக்கவுரையாற்றினார். மேலும் அம்பேத்கர் உருவப் படத்துக்கு பதிவாளர் கே.ஆறுமுகம், ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்கள், புல முதல்வர்கள், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், பல்வேறு சங்க உறுப்பினர்கள் மற்றும் மாணவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
 அம்பேத்கர் இருக்கை சார்பில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.
 விழாவில் சிறப்பு விருந்தினராக கல்வியாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு பங்கேற்று சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டுக்காக அம்பேத்கர் பாடுபட்டதை எடுத்துரைத்தார். பதிவாளர் கே.ஆறுமுகம் பேசுகையில், அம்பேத்கரின் கொள்கைகள் மூலம் நமது நாட்டில் சமத்துவம், சகோதரத்துவம் மேலோங்கி இருப்பதாகத் தெரிவித்தார்.
 தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக சர்வதேச சட்டத் துறை பேராசிரியர் செ.இளையராஜா விழா பேருரையாற்றினார்.
 மேலும் அவர், அம்பேத்கரின் சமூக பங்களிப்பு பற்றி மாணவர்களுடன் கலந்துரையாடினர். மொழிப்புல முதல்வர் வி.திருவள்ளுவன் வாழ்த்துரையாற்றினார். விழா ஏற்பாடுகளை அம்பேத்கர் இருக்கை இணைப் பேராசிரியர் கே.செüந்திரராஜன், துணைப் பேராசிரியை வி.ராதிகாராணி ஆகியோர் செய்திருந்தனர். துணைப் பேராசிரியை வி.ராதிகாராணி நன்றி கூறினார்.
 விழாவில் பல்கலைக்கழக புல முதல்வர்கள், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் திரளானோர் பங்கேற்றனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com