புதிய தொழில்நுட்பத்தில் எள் சாகுபடி 

குறிஞ்சிப்பாடி உழவர் மன்ற விவசாயிகள் புதிய தொழில்நுட்பத்தில் (நடவு முறையில்) எள் சாகுபடி செய்துள்ளனர். 
புதிய தொழில்நுட்பத்தில் எள் சாகுபடி 

குறிஞ்சிப்பாடி உழவர் மன்ற விவசாயிகள் புதிய தொழில்நுட்பத்தில் (நடவு முறையில்) எள் சாகுபடி செய்துள்ளனர்.
 குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் சுமார் 2 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் எள் சாகுபடி செய்யப்படுகிறது. இதில் நிலம் நன்கு புளுதியாக்கப்பட்ட பின்னர் பாத்தி கட்டி எள் விதைக்கப்படும். பின்னர், களை எடுப்பின்போது, குறிப்பிட்ட இடைவெளியில் செடிகளை விட்டுவிட்டு இதர செடிகளை எடுத்து விடுவது வழக்கம். தற்போது, குறிஞ்சிப்பாடி உழவர் மன்ற விவசாயிகள் 30-க்கும் மேற்பட்டோர், தங்களது நிலத்தில் புதிய தொழில்நுட்ப முறையில் எள் நடவு செய்துள்ளனர். இதன் மூலம் ஏக்கருக்கு 8 முதல் 10 மூட்டைகள் வரை எள் மகசூல் கிடைக்கும் என உறுதிபடக் கூறுகின்றனர்.
 இதுகுறித்து குறிஞ்சிப்பாடி உழவர் மன்றத் தலைவர் ஆர்.கே.ராமலிங்கம் கூறியதாவது: குறிஞ்சிப்பாடி பகுதி விவசாயிகள் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எள் மகசூல் செய்யத் தொடங்கியுள்ளனர்.
 சாதாரண முறையில் நிலத்தை நன்கு உழுது எள் விதைக்கப்படும். இதில் ஏக்கருக்கு 4 மூட்டை எள் கிடைக்கும்.
 ஆனால், நாங்கள் 2 அடிக்கு 2 அடி பார் பிடித்து, அரை அடி இடைவெளியில் எள்ளை கையால் நடவு செய்வோம். தண்ணீர் கட்டி 3-ஆம் நாள் களைக்கொல்லி மருந்துத் தெளித்து களையை கட்டுப்படுத்துவோம். 15 நாள்களுக்குப் பின்னர் குத்துக்கு ஒரு செடியை மட்டும் விட்டு விட்டு மற்றச் செடிகளை களைந்துவிடுவோம்.
 இந்த முறையில் செடிகள் நன்கு செழித்து வளரும். ஒரு சதுர மீட்டருக்கு சராசரியாக 9 செடிகள் வரை வளரும். பூக்கும் தருணம், காய்ப் பிடிக்கும் தருணம் என இரண்டு முறை டிஏபி கரைசல் தெளிப்போம்.
 எண்ணெய்ச் சத்து அதிகரிப்பதற்காக 4 கிலோ மாங்கனீசு சல்பேட்டை அடியுரமாக எருவுடன் கலந்து இடுவோம். இந்த புதிய முறைப்படி எள் சாகுபடி செய்தால் ஏக்கருக்கு குறைந்தபட்சம் 8 முதல் 10 மூட்டைகள் வரை மகசூல் கிடைக்கும் என்றார் அவர்.
 புதிய முறையில் நன்கு செழித்து வளர்ந்துள்ள எள் பயிர்களை குறிஞ்சிப்பாடி வேளாண்மை உதவி இயக்குநர் சின்னக்கண்ணு, விதைச் சான்று அலுவலர் ஜெயஸ்ரீ, உதவி அலுவலர் ராயப்பநாதன் ஆகியோர் புதன்கிழமை நேரில் பார்வையிட்டனர். அப்போது விவசாயிகள் ஆர்.கே.ராமலிங்கம், குப்புசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com