மின் வாரிய கூட்டுறவுச் சங்க தேர்தலில் சிஐடியூ வெற்றி

மின் வாரிய கூட்டுறவு பணியாளர்கள் சங்கத் தேர்தலில் மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியூ) வெற்றி பெற்றது.


மின் வாரிய கூட்டுறவு பணியாளர்கள் சங்கத் தேர்தலில் மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியூ) வெற்றி பெற்றது.
தமிழகம் முழுவதும் கூட்டுறவுச் சங்கங்களுக்கான தேர்தல் 4 கட்டங்களாக நடைபெற்றன. இதில், இரண்டு கட்டத் தேர்தல்கள் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், 3, 4-ஆம் கட்டங்களில் நடைபெற்ற தேர்தல் முடிவுகளை வெளியிட நீதிமன்றம் தடை விதித்தது. பின்னர் நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகே முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களை உள்ளடக்கிய மின்வாரிய பணியாளர்கள் கூட்டுறவு சங்க தேர்தலில் சிஐடியூ தலைமையிலான அணி 9 இடங்களில் வெற்றி பெற்றது.
இதற்கு தலைவர் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் கடலூரில் தேர்தல் அலுவலர் சுரேஷ் முன்னிலையில் சனிக்கிழமை நடைபெற்றது.
சிஐடியூ சார்பில் மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலச் செயலர் டி.பழனிவேல் தலைவராக இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டார்.
ஐக்கிய சங்கத்தின் டி.எஸ்.சத்தியநாராயணன் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். சிஐடியூ இயக்குநர்கள் கே.அம்பிகாபதி, என்.தேசிங்கு, எம்.சூரியகலா, என்.கோவிந்தராசு ஐக்கிய சங்க இயக்குநர்கள் ஜே. கல்யாணசுந்தரம், இ.மாயவன், எம்.மகேஷ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
புதிய தலைவருக்கு சிஐடியூ மாவட்ட செயலர் பி.கருப்பையன், கூட்டுறவு சங்க தலைவர் ஆர்.ஜீவாநந்தம், மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாவட்ட நிர்வாகிகள் ஜீவா, சேகர், தனசேகர் உள்ளட்டோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த வெற்றியின் மூலம் மின்வாரிய கூட்டுறவு சங்கத்தை இரண்டாவது முறையாக சிஐடியூ கைப்பற்றியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com