வளர்ச்சிப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு

குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியர் செவ்வாய்க்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியர் செவ்வாய்க்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
 குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியம், கருங்குழி ஊராட்சியில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டப் பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே, அங்கு கட்டப்பட்டு வரும் வீட்டினை பார்வையிட்டு ஊரக வளர்ச்சித் துறை மூலம் வீடு கட்டுவதற்கு உரிய கம்பிகள், உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதா, இதுவரை உரிய தொகை வழங்கப்பட்டுள்ளதா என வீட்டின் உரிமையாளரிடம் கேட்டறிந்தார்.
 மேலும், வீடு கட்டும் பணியை விரைவில் முடிக்க பயனாளிகளுக்கும், அலுவலர்களுக்கும் அறிவுறுத்தினார்.
 தொடர்ந்து, அதே பகுதி மற்றும் மேட்டுக்குப்பத்தில் தானே வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
 பின்னர், கருங்குழி பகுதியில் இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளையும் பார்வையிட்டார்.
 அதன் பின்னர் குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியம், பாச்சராபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்குச் சென்று பள்ளியில் ஆசிரியர்கள் வருகை பதிவேட்டினை ஆய்வு செய்தார்.
 மேலும், ஒளிப்படக் காட்சி மூலம் மாணவ, மாணவிகளுக்கு கற்றலின் திறமையை வெளிப்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுகிறதா என கேட்டறிந்தார்.
 பின்னர், மாணவ, மாணவிகளின் கற்றல் திறமையை பரிசோதிக்க பாடப் புத்தகங்களை படிக்கச் சொல்லி கேட்டறிந்தார்.
 ஆய்வுகளின் போது சிதம்பரம் வட்டாட்சியர் விஜயா, குறிஞ்சிப்பாடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கே.தமிழ்மணி, கே.அசோக்பாபு மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com