கால்நடைப் பராமரிப்பு உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

கடலூர் மாவட்டத்தில் காலியாகவுள்ள 34 கால்நடைப் பராமரிப்பு உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

கடலூர் மாவட்டத்தில் காலியாகவுள்ள 34 கால்நடைப் பராமரிப்பு உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து கடலூர் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கடலூர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறையில் காலியாகவுள்ள 34 கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பணிக்கு பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதியவர்கள் விண்ணப்பிக்கலாம். கால்நடைகளைக் கையாள, மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். ஆதரவற்ற விதவைகள், மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் அரசு விதிகளின்படி விகிதாசார அடிப்படையில் நியமிக்கப்படுவர். 
வயது வரம்பு: குறைந்தபட்சம் வயது 18 ஆகும். அதிகபட்சமாக அருந்ததியினர், ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு 35 வயதும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (மூஸ்லிம்) ஆகிய பிரிவினருக்கு 32 வயதும், பொதுப் பிரிவினருக்கு 30 வயதும் ஆகும்.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பங்களை www.cuddalore.nic.in என்ற இணையதளத்தில் பதவிறக்கம் செய்து கொள்ளலாம். நிறைவு செய்த விண்ணப்பங்களை "மண்டல இணை இயக்குநர், கால்நடை பராமரிப்புத் துறை, கால்நடை பெருமருத்துவமனை வளாகம், புதுப்பாளையம் முதன்மைச் சாலை, கடலூர் 607 001' என்ற முகவரிக்கு வருகிற 28}ஆம் தேதி மாலைக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
நேர்காணல் அடிப்படையில் மட்டுமே விண்ணப்பதார்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com