விவேகானந்தர் பிறந்த நாள் விழா

கடலூர், நெய்வேலி உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் விவேகானந்தரின் பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

கடலூர், நெய்வேலி உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் விவேகானந்தரின் பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
 கடலூர் மாவட்ட பாரதிதாசன் இலக்கிய மன்றம் சார்பில் கடலூர் வண்டிப்பாளையத்தில் கொண்டாடப்பட்ட விழாவுக்கு அந்த அமைப்பின் மாவட்டத் தலைவர் கடல் நாகராசன் தலைமை வகித்தார். துர்கா நர்சரி பள்ளித் தாளாளர் செந்தில்முருகன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று விவேகானந்தரின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தம்ப்ராஸ் நிர்வாகி கி.திருமலை வாழ்த்துரைத்தார்.
 விவேகானந்தர் தொடர்பாக மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன. மாவட்டக் குழந்தைகள் நலக் குழுத் தலைவர் ஜெயந்தி ரவிச்சந்திரன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். பள்ளித் தலைமை ஆசிரியை சங்கீதா வரவேற்றார். ஆசிரியை மகாலட்சுமி நன்றி கூறினார்.
 நெய்வேலியில்...: நெய்வேலி 18-ஆவது வட்டம், நூலகம் எதிரே நடைபெற்ற விழாவுக்கு என்எல்சி இந்தியா நிறுவனத்தின் மனித வளத் துறை பொது மேலாளர் குருசாமிநாதன் தலைமை வகித்தார்.
 இதில், சிறப்பு அழைப்பாளராக என்எல்சி இந்தியா நிறுவனத்தின் செயல் கண்காணிப்புத் துறையின் ஆலோசகர் திருநாவுக்கரசு பங்கேற்று விவேகானந்தரின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
 என்எல்சி இந்தியா நிறுவனத்தின் செயலர் ஜி.என்.சண்முகம், அலுவலகச் செயலர் தண்டபாணி, துணைச் செயலர் ஸ்ரீதர், துணைப் பொருளாளர் வெங்கடேஷ், இணைச் செயலர் குமார், பொறியாளர் முத்துக்குமார், என்எல்சி இந்தியா நிறுவன விளையாட்டுப் பள்ளி மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com