பொங்கல் விழா கொண்டாட்டம்

கடலூர் மாவட்டத்தில் தமிழர் திருநாளாம் பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள், பல்வேறு அமைப்பினரால் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.

கடலூர் மாவட்டத்தில் தமிழர் திருநாளாம் பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள், பல்வேறு அமைப்பினரால் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.
 கடலூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆற்றங்கரை வீதியில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது. கட்சியின் கடலூர் நாடாளுமன்ற தொகுதிச் செயலர் பா.தாமரைச்செல்வன் தலைமையில் பொங்கலிட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது.
 பூவிழுந்தநல்லூர்: காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள பூவிழுந்தநல்லூர் கிராமத்தில் 33-ஆம் ஆண்டு பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கிராமத்தில் ஒவ்வோர் ஆண்டும் சென்னை ராதா இன்ஜினியரிங் ஒர்க்ஸ் நிறுவனம் சார்பில் பொங்கல் விழா நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு விழாவையொட்டி, இயற்கையை வலுப்படுத்துதல், புவி வெப்பமயமாதலை தடுத்தல் மற்றும் இயற்கை விவசாயத்தை வலியுறுத்தி சாலையோரங்களில் சுமார் 200 மரக் கன்றுகள் நடும் நிகழ்ச்சியை தொழிலதிபர் எஸ்.வெங்கடேசன்பிள்ளை தொடக்கி வைத்தார்.
 தொடர்ந்து, திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் கிராம மக்கள் 540 குடும்பங்களை சேர்ந்தோருக்கு போர்வை, சுமார் ஆயிரம் பேருக்கு நிதியுதவி, போட்டிகளில் வென்ற 20 பேருக்கு ஒரு கிராம் தங்கக் காசு, 10 பேருக்கு 2 கிராம் தங்கக் காசுகளை எஸ்.வெங்கடேசன், வழங்கினார். நிகழ்ச்சியில் அவரது துணைவியார் வி.ஞானாம்பிகை, தலைமை அதிகாரி ராதாசெல்வி, நிர்வாக இயக்குநர் ஆர்.செந்தில்குமார், இயக்குநர் ஆர்.ராமு, கிராமத் தலைவர் ஆர்.பத்மநாபன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் பி.திரிபுரசுந்தரி, ஆசிரியர் ஞானம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 காடாம்புலியூர்: பண்ருட்டி தெற்கு ஒன்றிய திமுக சார்பில், தமிழர் திருநாள் விழா, கட்சியின் பொது உறுப்பினர்கள் கூட்டம் காடாம்புலியூரில் அண்மையில் நடைபெற்றது.
 நிகழ்ச்சிக்கு, ஒன்றியச் செயலரும், நெய்வேலி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினருமான சபா.ராஜேந்திரன் தலைமை வகித்து சிறப்புரையாற்றினார்.
 பின்னர், கட்சி உறுப்பினர்களுக்கு ஆடைகள், பரிசுப் பொருள்களை வழங்கிப் பேசினார்.
 முன்னதாக, அவைத் தலைவர் ராஜா வரவேற்றார். மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ஞானமணி முன்னிலை வகித்தார். பண்ருட்டி வடக்கு ஒன்றியச் செயலர் ராதாகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதி லட்சுமிநாராயணன், ஒன்றிய துணைச் செயலர்கள் செல்வக்குமார், சுமதி நந்தகோபால், ஏழுமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 பெரியாக்குறிச்சி: நெய்வேலி பவர் சிட்டி அரிமா சங்கம், நியூலைட் அறக்கட்டளையினர் இணைந்து நெய்வேலி, பெரியாக்குறிச்சியில் உள்ள நரிக்குறவர் குடிசைப் பகுதியில் திங்கள்கிழமை சமத்துவப் பொங்கலிட்டனர். விழாவுக்கு, சங்கத் தலைவர் அன்வர்தீன் தலைமை வகித்தார். அரிமா சங்க மாவட்டத் தலைவர் லட்சுமிநாராயணன், செயலர் ராஜா, தாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்வில், பல்வேறு கிராமியப் போட்டிகள் நடத்தப்பட்டன.
 சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்ட அரிமா சங்க மாவட்டத் தலைவர்
 ராஜமாரியப்பன், மந்தாரக்குப்பம் காவல் ஆய்வாளர் கமலஹாசன் ஆகியோர் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர். சகாயராஜ், ரியாஸ் ரகுமான், ரகு ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர். சுந்தர ராமானுஜம் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com