சாலையை அகலப்படுத்திய பின்னரே கால்வாய் அமைக்க வேண்டும்: பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தல்

சாலையை அகலப்படுத்திய பின்னரே, கால்வாயை அமைக்க வேண்டும் என பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியது.

சாலையை அகலப்படுத்திய பின்னரே, கால்வாயை அமைக்க வேண்டும் என பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியது.
 கடலூர் அனைத்துப் பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வெண்புறா சி.குமார் தலைமையில் நிர்வாகிகள் தேசிய நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: கடலூர் நகரின் முக்கியச் சாலைகளான மஞ்சக்குப்பம், பாரதி சாலை ஆகியவை தேசிய நெடுஞ்சாலைத் துறையின் கீழ் வருகிறது. இந்தச் சாலைகளில் ரூ. 15 கோடியில் மோகினி பாலத்திலிருந்து மஞ்சக்குப்பம், நேதாஜி சாலையின் இருபக்கமும் கால்வாய் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்தச் சாலைகள் குறுகிய நிலையில் உள்ளதால், அவற்றை இரு வழிப்பாதையாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை 5 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். இந்தச் சாலைகளை விரிவாக்கம் செய்த பின்னரே கழிவுநீர் கால்வாயை அமைக்க வேண்டும்.
 படை வீரர்கள் மாளிகை எதிரே சிப்காட் தொழில் சாலை மூலம் அமைக்கப்பட்ட பூங்கா பராமரிப்பு இல்லாத நிலையில் உள்ளது. இதனால், அந்தச் சாலை வழியாக வரும் வாகனங்கள் எதிரே வருபவர்களுக்குத் தெரிவதில்லை. போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் இந்தப் பூங்காவை அகற்றிவிட்டு, சாலையை விரிவுப்படுத்த வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளனர். மனு அளிப்பின் போது, பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பு இணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.சிவாஜிகணேசன், எம்.சுப்புராயன், எம்.குருராமலிங்கம், துரை.வேலு, நிர்வாகிகள் க.தர்மராஜ், ஏ.கிருஷ்ணமூர்த்தி, எஸ்.சையதுமுஸ்தபா, மு.கார்த்திகேயன், ராமலிங்கம், என்.கஞ்சமலை ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com