புதிய பாடத் திட்டம் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி

வடலூர் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஆசிரியர்களுக்கான புதிய பாடத் திட்டம் குறித்த

வடலூர் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஆசிரியர்களுக்கான புதிய பாடத் திட்டம் குறித்த பயிற்சி மையத்தை கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கே.பழனிச்சாமி புதன்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
 கடலூர் மாவட்டம் வடலூர் கல்வி மாவட்டம், வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஒன்றாம் வகுப்புக்கு மாவட்ட அளவில் கருத்தாளர் பயிற்சியும், 6-ஆம் வகுப்புக்கு சமூக அறிவியல், 9-ஆம் வகுப்புக்கு தமிழ், அறிவியல் பாடங்களை நடத்தும் ஆசிரியர்களுக்கான புதிய பாடத் திட்டம் தொடர்பான பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
 இந்த பயிற்சி மையத்தை கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கே.பழனிச்சாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது: ஆசிரியர்களுக்கான பயிற்சியின்படி, புதிய பாடத் திட்டத்தின் சிறப்பு அம்சங்களை மாணவர்களை மெருகேற்றும் வகையில் எடுத்துச் செல்ல வேண்டும். புதிய பாடத் திட்டம் சிறப்பான அம்சங்களை எட்ட உதவும் என்றார்.
 நிகழ்ச்சியில், கல்வி மாவட்ட அலுவலர்கள் (பொ) திருமுருகன் (வடலூர்) , செல்வக்குமார் (விருத்தாசலம்), ஓ.பி.ஆர். கல்வி நிறுவனங்களின் தாளாளர் ஆர்.செல்வராஜ், வட்டாரக் கல்வி அலுவலர்கள் மன்னர்மன்னன் (குறிஞ்சிப்பாடி), தே.சரஸ்வதிலட்சுமி (நெய்வேலி), குறிஞ்சிப்பாடி வட்டார வள மைய மேற்பார்வையாளர் அருள்சங்கு, ஆசிரியர் பயிற்றுநர்கள் ஜெ.ரவி, ஆர்.வேல்முருகன், ஏ.தாமோதரன், எஸ்.செந்தில் ஆகியோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com