விவசாயியை தாக்கிய வழக்கில் பொறியாளருக்கு 2 ஆண்டுகள் சிறை

பண்ருட்டி அருகே விவசாயியை வழிமறித்து தாக்கிய வழக்கில், பொறியாளருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து பண்ருட்டி நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பு வழங்கியது.

பண்ருட்டி அருகே விவசாயியை வழிமறித்து தாக்கிய வழக்கில், பொறியாளருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து பண்ருட்டி நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பு வழங்கியது.
 கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், சாத்திப்பட்டு அருகே உள்ள நெல்லித்தோப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி செங்கோல்ராஜன். இவருக்கும், அதே ஊரில் வசித்து வரும் மாயகிருஷ்ணனுக்கும் முன் விரோதம் இருந்து வந்ததாம்.
 இந்த நிலையில், கடந்த 19.6.2012 அன்று பைக்கில் சென்ற செங்கோல்ராஜனை மாயகிருஷ்ணன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வீரபாண்டியன், காசிலிங்கம், சுப்பிரமணியன் ஆகியோர் வழிமறித்து தாக்கினர். இதில், செங்கோல்ராஜன் பலத்த காயமடைந்தார்.
 இதுகுறித்த புகாரின் பேரில், காடாம்புலியூர் போலீஸார் மாயகிருஷ்ணன் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கப் பதிந்தனர். இந்த வழக்கு பண்ருட்டி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த பண்ருட்டி குற்றவியல் நடுவர் கணேஷ் மாயகிருஷ்ணனுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 3,750 அபராதமும், வீரபாண்டியன், காசிலிங்கம், சுப்பிரமணியன் ஆகியோருக்கு தலா ரூ. 500 அபராதமும் விதித்து புதன்கிழமை தீர்ப்பளித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com