மருந்தாளுநர்கள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம்

தமிழ்நாடு மருந்தாளுநர்கள் முன்னேற்றச் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் அவசர ஆலோசனைக் கூட்டம் பண்ருட்டியில் அண்மையில் நடைபெற்றது.

தமிழ்நாடு மருந்தாளுநர்கள் முன்னேற்றச் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் அவசர ஆலோசனைக் கூட்டம் பண்ருட்டியில் அண்மையில் நடைபெற்றது.
 மாநிலத் தலைவர் ப.செல்வமணி தலைமை வகித்தார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: பொது சுகாதாரத் துறை இயக்குநர், செவிலியர்கள் தலைமையில் 10,000 மருத்துவமனைகள் திறக்கப்படும் என்று அறிவித்துள்ளதையும், மருந்துகளையும் அவர்களே  வழங்குவார்கள் என்று தெரிவித்துள்ளதையும் கண்டிப்பது, "மருந்தியல் விதி 1948-இன்படி மருந்துகளை பதிவுபெற்ற  மருந்தாளுநர்கள் மட்டுமே கையாள வேண்டும்  என்ற நிலையில் , இயக்குநரின் அறிவிப்பு  அதிர்ச்சி அளிக்கிறது. 
 கேரள மாநிலத்தில், "மருந்தியல் விதி-1948' முறையாக அமல்படுத்தப்பட்டு, 100 வெளி நோயாளிகளுக்கு ஒரு மருந்தாளுநர், 75 உள் நோயாளிகளுக்கு ஒரு மருந்தாளுநர் என்ற வகையில் அனைத்து மருத்துவ நிலையங்களிலும் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 
மேலும், அனைத்து துணை சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகளிலும் மருந்தாளுநர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதேபோல தமிழகத்திலும் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
கூட்டத்தில், மாநிலப் பொருளாளர் க.இளங்கோ, மாநில துணைத் தலைவர் கோ.மகேந்திரன், மாநில இணைச் செயலர்கள் கே.பாரதி, சு.ராஜாராம், வி.பாம்பன் பழனி, எம்.பழனிராஜன், வி.அலமேலு, எஸ்.ரசூல்கான், கே.குமார், சி.பேச்சியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com